சாலை விபத்தில் சிக்கிய முன்னாள் கிரிக்கெட் வீரர்!

Former India Batsman #JacobMartin Hospitalised | ஜேக்கப் மார்ட்டின், 1999 - 2001-ம் ஆண்டு வரை இந்திய அணிக்காக விளையாடியுள்ளார்.

news18
Updated: January 9, 2019, 8:21 PM IST
சாலை விபத்தில் சிக்கிய முன்னாள் கிரிக்கெட் வீரர்!
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஜேக்கப் மார்ட்டின். (Twitter)
news18
Updated: January 9, 2019, 8:21 PM IST
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜேக்கப் மார்ட்டின் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திப்பதாக யூசுப் பதான் கூறியுள்ளார்.

குஜராத் மாநிலம், பரோடாவை (தற்போது வதோதரா) சேர்ந்த ஜேக்கப் மார்ட்டின், 1999 - 2001-ம் ஆண்டு வரை இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகமான இவர், இந்தியாவுக்காக மொத்தம் 10 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 158 ரன்கள் அடித்துள்ளார். இவரின் அதிகபட்ச ரன்கள் 39.

jacob martin, ஜேக்கப் மார்டின்
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜேக்கப் மார்ட்டின். (Getty: Images)


46 வயதான இவர், ஒரு வாரத்துக்கு முன்பு இரு சக்கர வாகனத்தில் சென்றபோது சாலை விபத்தில் சிக்கியதாக தெரியவந்துள்ளது. இதனை அடுத்து, அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஜேக்கப் மார்ட்டின், விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திப்பதாக கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.பதான் ட்வீட் செய்த பிறகே, முன்னாள் கிரிக்கெட் வீரரின் நிலைமை குறித்து பலருக்கு தெரியவந்துள்ளது. ஜேக்கப் மார்ட்டின், சிறந்த முதல் தர கிரிக்கெட் வீரராக இருந்துள்ளார். 138 போட்டிகளில் விளையாடி 9,192 ரன்கள் எடுத்துள்ளார். அவரது பேட்டிங் சராசரி 46.65.

கடந்த 2009-ம் ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஜேக்கப் அறிவித்தார். அதன்பிறகு, 2016-17 சீசனில் பரோடா அணிக்கு பயிற்சியாளராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.

#5MinuteAur: மத்திய விளையாட்டுத்துறை அமைச்சரின் புதிய சவால்! (வீடியோ)

Also Watch...

First published: January 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...