#மனிதம்: கிரிக்கெட் வீரர்கள் உதவி - அபாய கட்டத்தை தாண்டினார் மார்டின்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஜேக்கப் மார்ட்டின். (Twitter)

Jacob Martin out of ICU after financial support from cricketing fraternity | மார்டினின் மருத்துவச் செலவுக்கு கிரிக்கெட் துறையைச் சேர்ந்த பலரும் உதவி செய்தனர். #JacobMartin

 • News18
 • Last Updated :
 • Share this:
  கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட பலரின் உதவியால் முன்னாள் வீரர் ஜேக்கப் மார்டின் ஐ.சி.யூ.வில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

  இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், குஜராத் மாநிலம், பரோடாவை (தற்போது வதோதரா) சேர்ந்தவருமான ஜேக்கப் மார்ட்டின், கடந்த மாதம் (டிச.28) சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். இதனை அடுத்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இவரின் சிகிச்சைக்கு நாளொன்றுக்கு சுமார் ரூ.70,000 செலவு ஆகிறது.

  jacob martin I ஜேக்கப் மார்டின்
  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஜேக்கப் மார்ட்டின். (Twitter)


  46 வயதான மார்டின் மருத்துவச் செலவுக்கு பணமில்லாமல் தவித்து வருவதாக தகவல் வெளியானது. இதனை அடுத்து, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) சார்பில் ரூ. 5 லட்சமும், பரோடா கிரிக்கெட் சங்கம் சார்பில் ரூ.2.70 லட்சமும் நிதியுதவி வழங்கப்பட்டது.

  பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, சவுரவ் கங்குலி, ஜாகிர் கான், முனாப் பட்டேல், யூசுப் பதான் உள்ளிட்ட பல கிரிக்கெட் வீரர்களும் உதவி செய்வதாக தெரிவித்தனர். ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவின் சகோதர் க்ருனல் பாண்டியா ‘ப்ளாங்க் செக்’ கொடுத்து நெகிழச் செய்தார்.

  kurnal pandya, Jacob Martin, க்ருனல் பாண்டியா, ஜேக்கப் மார்டின்
  க்ருனல் பாண்டியா மற்றும் ஜேக்கப் மார்டின்.


  இந்நிலையில், தீவிர சிசிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஜேக்கப் மார்டின், அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாகவும், அவர் தற்போது சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுவிட்டதாகவும் அவரது மனைவி கியாடி கூறியுள்ளார்.

  ரூ.500 முதல் லட்சங்கள் என பலரின் உதவியால், ஜேக்கப் மார்டின் சிகிச்சைக்காக சுமார் ரூ.16 லட்சம் கிடைத்துள்ளது. இதை வைத்து ஜேக்கப் மார்டினுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், உதவி செய்தவர்களுக்கு நன்றி எனவும் அவரது மனைவி கியாடி தெரிவித்தார்.

  ரோகித் சர்மாவுக்கு வாழ்வளித்த ‘தல’ தோனி!

  Also Watch...

  Published by:Murugesan L
  First published: