எட்டாவது டி20 உலகக்கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் கடந்த மாதம் 16-ம் தேதி தொடங்கி இன்றுடன் நிறைவடைய உள்ளது. 16 அணிகள் பங்கேற்ற இந்த உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. மெல்பர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இறுதி போட்டியில் பாகிஸ்தான் அணியை 5 விக்கெட் வீழ்த்தி இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. பாகிஸ்தான் அணி தோல்வியை அந்நாட்டு ரசிகர்கள் மிகுந்த சோகத்துடன் எதிர்கொண்டனர்.
அத்துடன் அந்நாட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களும், பிரபலங்களும் சமூக வலைத்தளங்களில் சோகத்தை வெளிப்படுத்தினர். பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப் பந்து வீச்சாளர் சோயப் அக்தர் தனது ட்விட்டர் பக்கத்தில் இதயம் உடைந்தது என்பதை குறிப்பிடும் விதமாக எமோஜிக்களை போட்டி தனது வருத்தத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
இதற்கு இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தனது ட்விட்டர் பக்கத்தில், மன்னிக்கவும் சகோதரா. இதை தான் கர்மா என்பார்கள் என்ற பதில் அளித்துள்ளார். சோகத்தில் இருந்த சோயப் அக்தருக்கு முகமது ஷமி அளித்த பதில் கவனத்தை பெற்றுள்ளது.
Sorry brother
It’s call karma 💔💔💔 https://t.co/DpaIliRYkd
— Mohammad Shami (@MdShami11) November 13, 2022
முகமது ஷமி குறித்தும் இந்திய பந்து வீச்சாளர்கள் குறித்தும் சோயப் அக்தர் கூறிய கருத்துக்கு பதில் அளிக்கும் விதமாகவே ஷமி இவ்வாறு கூறினார் என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பேசி வருகின்றனர்.முன்னதாக அரையிறுதியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்தியா படுதோல்வி அடைந்த போது இந்திய வேகப்பந்து வீச்சாளர்களை சோயப் அக்தர் விமர்சித்து கருத்துக்களை தெரிவித்திருந்தார். அதேபோல், டி20 உலகக் கோப்பை இந்தியா அணியில் முகமது ஷமியை சேர்த்தது குறித்தும் அக்தர் கேள்வி எழுப்பியதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: எதிர்காலத்தில் ஐபிஎல் போட்டி.. நிருபரின் கேள்வியால் திகைத்துப்போன பாகிஸ்தான் கேப்டன்.. சமாளித்து முடித்த மேனேஜர்!
இதையெல்லாம் வைத்து தான் ஷமி அக்கதருக்கு இவ்வாறு ட்வீட் மூலம் பதில் அளித்துள்ளார் எனக் கூறப்படுகிறது.அதேவேளை, முகமது ஷமியின் ட்வீட்டிற்கு பாகிஸ்தான் வீரர் அப்ரிடி உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.