Home /News /sports /

ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய தோனி.. ஐசிசி வெளியிட்ட வீடியோ!

ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய தோனி.. ஐசிசி வெளியிட்ட வீடியோ!

எம் எஸ் தோனி

எம் எஸ் தோனி

இந்த ஆண்டு அவர் சிஎஸ்கே அணியின் கேப்டனாக நீடிப்பாரா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது!

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    இந்திய கிரிக்கெட்டின் சிறந்த கேப்டன் எனப் புகழப்படும் எம் எஸ் தோனி தன்னுடைய ஓய்வை அறிவித்து இன்றுடன் இரண்டாண்டுகள் நிறைவு பெறுகின்றன. தோனி 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இரவு தன்னுடைய ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார்.

    2019ம் ஆண்டு கிரிக்கெட் உலகக்கோப்பை அரை இறுதிப்போட்டியில் தோனி கப்தில் வீசிய பந்தால் ரன் அவுட் ஆகி கண் கலங்கி மைதானத்தை விட்டு வெளியேறியதிலிருந்தே அவர் சொல்லிக்கொள்ளும்படியான எந்த பெரிய போட்டியிலும் அதன் பிறகு பங்குபெறவில்லை.

    தோனி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளின் இந்திய கேப்டன் பதவியிலிருந்தபோதே அவரது ஓய்வு அறிவிப்பு குறித்த கேள்விகளும், வதந்திகளும் எழத்தொடங்கின. அவற்றையெல்லாம் மிக லாவகமாகக் கையாண்டார் தோனி. அவர் 2017-ம் ஆண்டு ஒரு நாள் அணிக்கான கேப்டன் பதவியிலிருந்து விலகி கோலி கேப்டனாக பொறுப்பேற்றுக்கொண்டார்.



     




    View this post on Instagram





     

    A post shared by M S Dhoni (@mahi7781)






    அப்போதிலிருந்தே தனக்கு பிறகான வலுவான இந்திய அணி உருவாக அவர் உற்றதுணையாக இருந்தார். இன்று இந்திய அணியின் முக்கிய வீரர்களாக இருக்கும் பெரும்பாலானோர் தோனி கேப்டனாக இருக்கும்போது இந்திய அணியில் அறிமுகமாகி அதன் பின் மெருகேற்றப்பட்டவர்களே.

    தோனி இந்திய அணியிலிருந்து விலகி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்துவிட்டாலும் இன்றும் அவரை கேப்டனாக எண்ணும் வீரர்கள் உள்ளனர். அதனால்தான் கோலி ‘நீங்கள்தான் எப்போதும் என்னுடைய கேப்டன்.’ என மீண்டும் மீண்டும் சொல்கிறார்.



     




    View this post on Instagram





     

    A post shared by ICC (@icc)






    இரண்டு வருடத்திற்கு முன்பு தோனி தன்னுடைய ஓய்வு அறிவிப்பை இன்ஸ்டாகிராமில் அறிவித்தபோது அவரது ரசிகர்களுக்கு அது அதிர்ச்சியாக இருந்தது. ஆனாலும் அவர் சிஎஸ்கே அணியின் கேப்டனாக தொடர்ந்து அவர் ரசிகர்களை மகிழ்வித்துவருகிறார். இந்த ஆண்டு அவர் சிஎஸ்கே அணியின் கேப்டனாக நீடிப்பாரா என்ற மற்றொரு கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.
    Published by:Saravana Siddharth
    First published:

    Tags: Cricket, CSK, MS Dhoni

    அடுத்த செய்தி