கோலியின் இடம்.... ரவி சாஸ்திரியின் ஐடியா முட்டாள் தனமானது என்கிறார் அகார்கர்!

ரவி சாஸ்திரி மற்றும் அஜீத் அகார்கர்.

silly to push down #ViratKohli to No.4: #AjitAgarkar | இந்திய அணியில் மிடில் ஆர்டர் செயல்பாடு இன்னும் சரியாக இல்லை என்ற கருத்து இருந்து வருகிறது. #WorldCup2019

 • News18
 • Last Updated :
 • Share this:
  இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் யோசனை முட்டாள் தனமானது என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் அஜீத் அகார்கர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

  சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அனைத்து விதமான போட்டிகளிலும் சிறந்த வீரராக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி வலம் வருகிறார். இந்திய அணியில் டெஸ்ட் போட்டியில் 4-வது வீரராகவும், ஒரு நாள் மற்றும் டி-20 போட்டிகளில் 3-வது வீரராகவும் விராட் கோலி களமிறங்கி வருகிறார்.

  Virat Kohli, விராட் கோலி
  ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி. (ICC)


  2019-ம் ஆண்டுக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு இன்னும் சில மாதங்களே உள்ளதால், இந்திய அணியின் செயல்பாடு மற்றும் தேர்வு குறித்து பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்திய அணியில் மிடில் ஆர்டர் செயல்பாடு இன்னும் சரியாக இல்லை என்ற கருத்து இருந்து வருகிறது.

  இதற்கிடையே, உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியின் மிடில் ஆர்டர் வரிசை பலமாக இருக்க வேண்டுமானால், கோலி ஒரு வரிசை பின்தங்கி 4-வது வரிசையில் விளையாட வேண்டும் என்று அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி யோசனை தெரிவித்திருந்தார்.

  விராட் கோலியுடன் ரவிசாஸ்திரி (Twitter/RaviShastri)


  இந்நிலையில், கோலியை 4-வது வீரராக களமிறங்கச் சொல்லும் ரவி சாஸ்திரியின் யோசனை முட்டாள் தனமான முடிவு என முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அஜீத் அகார்கர் கூறியுள்ளார்.

  இதுகுறித்து அவர் பேசுகையில், “கோலி 3-வது வரிசையில் களமிறங்கி 32 சதங்கள் அடித்துள்ளார். இந்த வரிசையில் அவர் சிறப்பாக விளையாடி வருகிறார். உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேனாக திகழும் அவரை 4-வது வீரராக பின்னுக்கு தள்ளி ஆட சொல்வது சரியாக இருக்காது. 3-வது வரிசைக்கே அவர் சரியானவர்” என்று குறிப்பிட்டார்.

  ஒரே போட்டியில் தோனி படைத்த மூன்று சாதனைகள்!

  Also Watch...

  Published by:Murugesan L
  First published: