முகப்பு /செய்தி /விளையாட்டு / “என்னோட தவறுதான் காரணம்...” வாஷிங்டன் சுந்தர் ரன் அவுட் குறித்து சூர்ய குமார் கருத்து..!

“என்னோட தவறுதான் காரணம்...” வாஷிங்டன் சுந்தர் ரன் அவுட் குறித்து சூர்ய குமார் கருத்து..!

சூர்ய குமார் யாதவ்

சூர்ய குமார் யாதவ்

நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் வாஷிங்டன் சுந்தர் ஆட்டமிழந்தற்கு தான் தான் காரணம் என சூர்ய குமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Uttar Pradesh, India

இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையே டி20 கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்த நிலையில் இரண்டாவது போட்டி நேற்று லக்னோவில் நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர் ஃபின் ஆலன் 11 ரன்கள் எடுத்து வெளியேறிய நிலையில், சீரான இடைவெளியில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழத் தொடங்கின.

இதனால் பேட்டிங்கில் திணறிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 99 ரன்களை மட்டுமே எடுத்தது. இதையடுத்து 100 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங் செய்யத் தொடங்கியது. ஓபனிங் பேட்ஸ்மேன்கள் சுப்மன் கில் 11 ரன்னிலும், இஷான் கிஷன் 19 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். குறிப்பாக இஷான் கிஷன் 32 பந்துகளை எதிர்கொண்டு 19 ரன்களைதான் எடுத்தார்.

இந்திய வீரர்களும் விக்கெட்டுகளை இழந்து ரன் குவிக்க முடியாமல் திணறிய நிலையில், 4 விக்கெட்டுக்கு சூர்ய குமாருடன் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா இணைந்து பொறுப்புடன் விளையாடி அணிக்கு வெற்றியை தேடித் தந்தனர். ஆட்டம் இறுதி ஓவர் வரை சென்ற நிலையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா த்ரீல் வெற்றி பெற்றது. கடந்த போட்டியில் அரைச் சதம் அடித்த வாஷிங்டன் சுந்தர் 9 பந்துகளில் 10 ரன்கள் எடுத்திருந்தபோது ரன் அவுட் ஆனார். இந்த ரன் அவுட்டிற்கு எதிர்புறம் நின்ற சூர்ய குமார் யாதவின் கவனக்குறைவே காரணமாக அமைந்தது.

இதை ஆட்டத்தின் பரிசளிப்பு விழாவின் போது பேசிய சூர்ய குமாரே இதை ஒப்புக்கொண்டார். ஆட்ட நாயகன் விருது பெற்ற சூர்ய குமார், வாஷிங்டன் சுந்தர் அவுட் ஆனதற்கு நான் தான் காரணம். அந்த நேரத்தில் நான் ரன் எடுக்க ஓடியிருக்க கூடாது. பந்து எந்த திசையில் வந்தது என்பதைக் கூட நான் சரியாக பார்க்கவில்லை என்று தெரிவித்தார். தொடரை வெல்வது யார் என்பதை தீர்மானிக்கும் 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி அகமதாபாத்தில் வரும் புதன் அன்று நடைபெறுகிறது.

First published:

Tags: Run out, Suryakumar yadav, Washington Sundar