Home /News /sports /

எதிர் முனையில் இருப்பது தினேஷ் கார்த்திக் நான் அல்ல: சிங்கிள் எடுக்க மறுத்த பாண்ட்யாவுக்கு ஆஷிஷ் நெஹ்ரா குட்டு

எதிர் முனையில் இருப்பது தினேஷ் கார்த்திக் நான் அல்ல: சிங்கிள் எடுக்க மறுத்த பாண்ட்யாவுக்கு ஆஷிஷ் நெஹ்ரா குட்டு

பாண்டியா

பாண்டியா

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டெல்லியில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா வென்றது, ஆனால் இந்தியா பேட்டிங்கில் சிக்சர் மழை பொழிந்தது, ஹர்திக் பாண்டியா கடைசி ஒவரில் அடித்த சிக்ஸ் அபாரமானது, போதிய இடம் கிடைக்காவிட்டாலும் கடைசி நேர ரிஸ்ட் ஷாட்டில் லாங் ஆன் மேல் அடித்த சிக்ஸ் அபாரமானது, அதற்காக எதிர்முனையில் இருப்பது ஏதோ ஆவேஷ் கான் என்று நினைத்து தினேஷ் கார்த்திக்கிற்கே சிங்கிளை மறுத்தார் ஹர்திக் பாண்டியா.

மேலும் படிக்கவும் ...

    இதனை எதிரொலித்து குஜராத் டைட்டன்ஸ் அணியின் பயிற்சியாளரும் ஹர்திக் பாண்டியாவும் தோஸ்த்துமான ஆஷிஷ் நெஹ்ரா, “ஹர்திக் பாண்டியா கடைசி பந்துக்கு முன்பாக சிங்கிள் எடுத்திருக்க வேண்டும்.எதிர்முனையில் இருப்பது தினேஷ் கார்த்திக், நான் அல்ல.

    ஹர்திக் பாண்டியா அனைத்து ரோல்களிலும் ஆடக்கூடிய ஒரு வீரர். அவரால் எல்லா விதமான சூழ்நிலைக்கேற்பவும் ஆட முடியும். டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டிலும் பார்த்திருக்கிறோம். அவரது பேட்டிங் திறமைக்கு அவர் எந்த நிலையிலும் இறங்கலாம்.

    குஜராத் டைட்டன்ஸுக்காக பவுலிங்கும் வீசினார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அவர் தன் பழைய ரோலுக்குத் திரும்பியுள்ளார். அவரால் எந்த ரோலிலும் வெற்றிகரமாக திகழ முடிகிறது அதுவும் சுலபமாக அவரால் முடிகிறது” என்றார் ஆஷிஷ் நெஹ்ரா.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Dinesh Karthik, Hardik Pandya, India vs South Africa, T20

    அடுத்த செய்தி