பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியின் 4ம் நாள் ஆட்டத்தில் 186/6 என்ற நிலையிலிருந்து 123 ரன்கள் சேர்த்த இந்திய பின் வரிசை ஜோடி ஷர்துல் தாக்குர் (67), வாஷிங்டன் சுந்தர் (62), ஆகியோருக்கு பாராட்டு மழை குவிந்து வருகின்றன.
விராட் கோலி, ரிக்கி பாண்டிங், மேத்யூ ஹெய்டன், டாம் மூடி ஆகியோர் பாராட்டித்தள்ளியுள்ளனர், ஆனால் மஞ்சுரேக்கர் விமர்சனம் செய்தாலும் கொஞ்சம் ஓவராகப் போய் விடுகிறார், பாராட்டினாலும் சம்பந்தா சம்பந்தமில்லாமல் ரொம்ப ஓவராகப் போய்விடுகிறார்.
“சுந்தர், ஷர்துல் ஆடிய சில ஷாட்கள் எனக்கு சச்சினும் விராட் கோலியும் சேர்ந்து ஆடுவது போன்ற தோற்றத்தையே ஏற்படுத்தியது. ஆனால் இவர்கள் 7 மற்றும் 8ம் நிலை வீரர்கள் என்ற எதார்த்தமும் எனக்குப் புரிகிறது. அந்த அளவுக்கு நன்றாக ஆடினார்கள்.
வாஷிங்டன் சுந்தர் பேட்டிங் திறமையை ஐபிஎல் மற்றும் முதல் தர கிரிக்கெட்டில் பார்த்தவர்களுக்கு ஆச்சரியமாக இருந்திருக்காது. ஷர்துலும் முக்கிய இன்னிங்ஸ்களை டி20யில் ஆடியுள்ளார்.
அவரது கண்ணுக்கும் கைக்கும் நல்ல ஒருங்கிணைவு உள்ளது. உத்தி ரீதியாகவும் நன்றாக ஆடுகிறார். வாஷிங்டன் சுந்தர் ஆடிய சில டிரைவ்கள் அந்த பேலன்ஸ் அற்புதம். இதற்கு முன்னால் இத்தகைய பவுலிங்கை ஆடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. சுந்தர் பவுலிங்கும், பேட்டிங்கும் பல டெஸ்ட் போட்டிகள் ஆடியதன் அனுபவம் போல் இருந்தது.
பேட்டிங், பவுலிங் என்று ஷர்துலும், சுந்தரும் அசத்துவது எனக்கு உண்மையில் மகிழ்ச்சியை அளிக்கிறது” என்றார் மஞ்சுரேக்கர்.
விமர்சித்தால் துண்டு துணுக்கு வீரர் என்பது புகழ்ந்தால் டெய்ல் எண்டர்களை சச்சின், கோலி என்பது என்று மஞ்சுரேக்கர் இரு தீவிர முனைக்குச் செல்கிறார். பிசிசிஐ வர்ணனைக் குழுவில் அவரை ஒழித்தது காரணமாக இருக்குமோ என்னவோ தெரியவில்லை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: India vs Australia, Shardul thakur