தோனி இருந்திருந்தால் அவ்வளவுதான் - ரோஹித் சர்மா

இந்த ஐபிஎல் சீசனில் மும்பை அணிக்கு எதிராக விளையாடிய 2 போட்டிகளிலும் சென்னை அணி தோல்வி அடைந்தது.

தோனி இருந்திருந்தால் அவ்வளவுதான் - ரோஹித் சர்மா
ரோஹித் சர்மா
  • News18
  • Last Updated: April 27, 2019, 1:38 PM IST
  • Share this:
தோனி இருந்திருந்தால் சென்னை அணிக்கு பலமாக இருந்திருக்கும் என்று ரோஹித் சர்மா கூறியுள்ளார்.

நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை- மும்பை அணிகள் மோதிய போட்டி நடைபெற்றது.  இந்தப் போட்டியில் காய்ச்சல் காரணமாக தோனி விளையாடவில்லை.

முதலில் விளையாடிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்களை எடுத்தது. அந்த அணியின் கேட்பன் ரோஹித் சர்மா அதிகமாக 67 ரன்களை எடுத்தார்.
இதையடுத்து களமிறங்கிய சென்னை அணி வீரர்கள் தொடக்கம் முதலே சொதப்பினர். சென்னை அணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். கடைசியில் சென்னை அணி 10 விக்கெட்டுகளையும் இழந்து 109 ரன்களை மட்டுமே எடுத்தது.சென்னை அணியில் அதிகபட்சமாக முரளி விஜய் 38 ரன்கள் எடுத்தார்.

இதனால் மும்பை அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஐபிஎல் சீசனில் மும்பை அணிக்கு எதிராக விளையாடிய 2 போட்டிகளிலும் சென்னை அணி தோல்வி அடைந்தது.

இதையடுத்து பேசிய மும்பை அணி கேப்டன் ரோஹித் சர்மா, ‘தோனி இல்லாதது எங்களுக்கு சாதகமாக அமைந்தது. அவர் இருந்திருந்தால் சென்னை அணிக்கு பலமாக இருந்திருக்கும். தோனி இல்லாதது சிஎஸ்கேவுக்கு ஏமாற்றம் தான் என்று உறுதியாக சொல்ல முடியும். தோனி இல்லாமல் சேஸிங் செய்வது அந்த அணிக்கு கடினம் தான்’ என்று கூறினார்.

மேலும் பேட்டிங் அல்லது பந்துவீச்சு எதை தேர்வு செய்தாலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று எண்ணினோம். இந்தப் போட்டி எனக்கு திருப்திகரமாக இருந்தது என்று ரோஹித் சர்மா கூறியுள்ளார்

Also watch


விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
First published: April 27, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்