44 நாட்கள்: ‘யார்க்கர்’ நடராஜனின் இன்னொரு சாதனை

நடராஜன்.

இந்த விஷயத்தில் நியூஸிலாந்து வீரர் பீட்டர் இங்கிராம் 12 நாட்கள் இடைவெளியில் 3 வடிவங்களிலும் ஆடி விட்டார்.

 • Share this:
  தமிழக வீரர் டி.நடராஜன் இன்று பிரிஸ்பன் மைதானத்தில் இந்தியாவுக்காக தன் முதல் டெஸ்ட் போட்டியை ஆடியதன் மூலம் 44 நாட்களில் அனைத்து வடிவங்களுக்குமான வீரராக மாறியுள்ளார்.

  அதாவது ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமாகி, டி20 யில் இந்திய அணிக்கு ஆடி தற்போது டெஸ்ட்டிலும் ஆட அவருக்கு 44 நாட்கள்தான் ஆகியுள்ளது, ஒரு வீரர் 3 வடிவங்களிலும் ஆடுவதற்கான கால இடைவெளி 44 நாட்கள் என்ற அளவில் நடராஜன் கணக்கில் இதுவும் ஒரு சாதனையாகி உள்ளது.

  டிசம்பர் 2ம் தேதி ஆஸ்திரேலிய தலைநகர் கான்பெராவில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமாகிறார். 2 நாட்கள் சென்று டி20-க்கான இந்திய அணியில் விளையாடினார், இன்று 15-1-2021 அன்று டெஸ்ட் போட்டியிலும் பிரிஸ்பனில் ஆடி மிக முக்கிய விக்கெட்டுகளான மேத்யூ வேட் (45), லபுஷேன் (108) ஆகியோர் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

  நடராஜனுக்கு முன்பாக புவனேஷ்வர் குமார் 3 வடிவங்களுக்கான வீரராக மிக விரைவில் ஆனார். டிசம்பர் 25, 2012-ல் பாகிஸ்தானுக்கு எதிராக டி20யில் அறிமுகமானார் புவனேஷ்வர் குமார். 5 நாட்கள் சென்று சென்னையில் பாகிஸ்தானுக்கு எதிராக ஒருநாள் சர்வதேச போட்டியில் ஆடினார். பிறகு பிப்ரவரி 2013-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகி 3 வடிவங்களிலும் சடுதியில் இடம்பெற்றார்.

  இந்த விஷயத்தில் நியூஸிலாந்து வீரர் பீட்டர் இங்கிராம் 12 நாட்கள் இடைவெளியில் 3 வடிவங்களிலும் ஆடி விட்டார். 2009-10 வங்கதேசத்தொடரில் பீட்டர் இங்கிராம் என்ற வீரர் 3 வடிவங்களிலும் ஆடிவிட்டார். ஆகவே உலக அளவில் அவருக்கு அடுத்தபடியாக நடராஜன் உள்ளார்.
  Published by:Muthukumar
  First published: