Home /News /sports /

நிச்சயமா புது பிளேயர் ஒருத்தர் வரத்தான் போறாரு- இந்திய அணியில் பெரிய மாற்றம் ஏற்படும்- ஹர்பஜன் சிங்

நிச்சயமா புது பிளேயர் ஒருத்தர் வரத்தான் போறாரு- இந்திய அணியில் பெரிய மாற்றம் ஏற்படும்- ஹர்பஜன் சிங்

 ஹர்பஜன்

ஹர்பஜன்

இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் ஒரு வித்தியாசமான ஆனால் சுவாரசியமான பார்வையை முன் வைத்தார். 

    தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இதனையடுத்து இந்திய அணித் தேர்வு குறித்து சில கேள்விகள் எழுந்துள்ளன.  விராட் கோலி தலைமையிலான அணி வெற்றியுடன் டெஸ்ட் தொடரைத் தொடங்கியது; செஞ்சூரியனில் 113 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது. ஆனால் அந்த அணி வலுவாக மீண்டெழுந்து இந்தியாவுக்கு வரலாற்று தொடர் வெற்றியை மறுத்தது.

    ஜோகன்னஸ்பர்க் மற்றும் கேப்டவுனில் நடந்த கடைசி இரண்டு ஆட்டங்களில்  போதிய ரன் எடுக்காததால்  தோல்வியடைந்ததாக கோலி கூறினார். பேட்டர்கள், குறிப்பாக மிடில் ஆர்டர், தொடரின் ஒவ்வொரு ஆட்டத்திலும் தடுமாறினர். சேதேஷ்வர் புஜாரா மற்றும் அஜிங்க்யா ரஹானே  தங்கள் சீரற்ற பேட்டிங்குக்காக பெரும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகின்றனர். , அதே நேரத்தில் டெய்ல் எண்டர்களும் சரியாகக் கைக்கொடுக்கவில்லை.

    இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் ஒரு வித்தியாசமான ஆனால் சுவாரசியமான பார்வையை முன் வைத்தார்.  தென்னாப்பிரிக்காவிற்கு விமானம் ஏறும் முன் நியூசிலாந்துக்கு எதிரான மும்பை டெஸ்டில் பயங்கர சதம் அடித்த தொடக்க வீரர் மயங்க் அகர்வால் தென் ஆப்பிரிக்காவில் பேட்டிங்கில் தடுமாறியதை சுட்டிக்காட்டினார்.

    யூடியூப் சேனலில் ஹர்பஜன் கூறியதாவது, “மயங்க் அகர்வால் 6 இன்னிங்ஸ்கள் வாய்ப்புப் பெற்றார், ஆனால் அவர் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை, இது சில புதிய வீரர் வரக்கூடும் என்பதற்கான அறிகுறியாகும். ஷுப்மான் கில் மற்றும் பிரித்வி ஷாவை அடுத்த தொடரில் காணலாம், ஏனெனில் ஒரு வீரருக்கு ஆறு இன்னிங்ஸ்கள் போதுமானது. மயங்க் ஒரு நல்ல வீரர், நான் அவரை ஆதரிக்கிறேன், ஆனால் அவர் போதுமான அளவு ஸ்கோர் செய்யவில்லை, எனவே இங்கிருந்து முன்னோக்கி செல்லும் வழி என்ன என்று எனக்குத் தெரியவில்லை.

    ஜோகன்னஸ்பர்க்கில் ரஹானே மற்றும் புஜாரா 50 ரன்கள் இன்னிங்சை ஆடி ஆட்டமிழந்தனர், ஆனால் மூத்தவீரர்களிடமிருந்து எதிர்பார்ப்பு இதை விட அதிகமாக உள்ளது. அவர்கள் போதுமான ரன்களை எடுக்கவில்லை, மேலும் இங்கிருந்து முன்னேறுவது அவர்களுக்கு கடினமாக இருக்கும் என்று நான் தனிப்பட்ட முறையில் உணர்கிறேன்.

    முந்தைய தொடரில் சதம் அடித்த ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும்  சூர்யகுமார் யாதவ்,  போன்ற வீரர்கள் தங்கள் வாய்ப்பிற்காக காத்திருக்கிறார்கள், ரஹானே மற்றும் புஜாரா அவர்கள் செயல்பட்ட விதம் உண்மையில் ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் சூர்யகுமாருக்கு கதவுகளைத் திறந்துவிட்டதாக நான் உணர்கிறேன்” இவ்வாறு கூறினார் ஹர்பஜன் சிங்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Harbhajan Singh, India vs South Africa

    அடுத்த செய்தி