Home /News /sports /

என்னை ஓப்பனிங் இறக்கச் சொல்லி கங்குலியிடம் சொன்னது ஜாகீர் கான்

என்னை ஓப்பனிங் இறக்கச் சொல்லி கங்குலியிடம் சொன்னது ஜாகீர் கான்

இரண்டு முச்சத மன்னன் சேவாக்.

இரண்டு முச்சத மன்னன் சேவாக்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி டெஸ்ட் கிரிக்கெட்டில் புரட்சியை ஏற்படுத்தியவர் என்றே கூற வேண்டும், காரணம் இன்று இங்கிலாந்து பெருமை பீற்றிக்கொள்ளும் ‘பாஸ்பால்’, ஆக்ரோஷ கிரிக்கெ போன்றவற்றை அன்றே சேவாகை ஓப்பனிங்கில் இறக்கியது மூலம் சவுரவ் கங்குலி சாதித்ததுதான்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India
    இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி டெஸ்ட் கிரிக்கெட்டில் புரட்சியை ஏற்படுத்தியவர் என்றே கூற வேண்டும், காரணம் இன்று இங்கிலாந்து பெருமை பீற்றிக்கொள்ளும் ‘பாஸ்பால்’, ஆக்ரோஷ கிரிக்கெ போன்றவற்றை அன்றே சேவாகை ஓப்பனிங்கில் இறக்கியது மூலம் சவுரவ் கங்குலி சாதித்ததுதான்.

    வாசிம் அக்ரம் ஓப்பனிங் பவுலிங்னா எப்படி உலக ஓப்பனிங் பேட்டர்கள் பயந்தார்களோ அதே போல் சேவாக் ஓப்பனிங் என்றால் பவுலர்களுக்கு கிலிதான். ஆனால் தொடக்கத்தில் எல்லாம் மிடில் ஆர்டரில்தான் இறங்கினார், அவர் அறிமுக டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அடித்த சதம் கூட மிடில் ஆர்டரில் சேவாக் இறங்கி அடித்ததுதான்.

    இந்நிலையில், ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்க இருக்கும் நிலையில், அந்த போட்டிக்கு முன்னோட்டமாக சோயிப் அக்தருடன் இணைந்து ஸ்டார்ஸ்போர்ட்ஸில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அதில் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை உள்ளிட்ட பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார். அப்போது, ஓபனிங் பேட்ஸ்மேனாக நீங்கள் களமிறங்கியது எப்படி? என்று கேட்க, அவரின் கேள்விக்கு சேவாக் வெளிப்படையாக பதில் அளித்துள்ளார்.



    நான் கிரிக்கெட் வாழ்க்கையை மிடில் ஆர்டராக தான் தொடர்ந்தேன். 1999 ஆம் ஆண்டுகளில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடியபோதெல்லாம் மிடில் ஆர்டரில் விளையாடினேன். அதன்பிறகு, நான் ஓபனிங் பேட்ஸ்மேனாக விளையாடியதற்கு ஜாகீர்கான் காரணம். அவர் சவுரவ் கங்குலியிடம் என்னை ஓபனிங் பேட்ஸ்மேனாக களமிறக்குமாறு பரிந்துரைத்தார். அவர் கூறிய பிறகே என்னை சவுரவ் கங்குலி ஓபனிங் பேட்ஸ்மேனாக களமிறக்கினார், என்றார் சேவாக்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Asia cup, Asia cup cricket, Asia cup match, India vs Pakistan, Virender sehwag

    அடுத்த செய்தி