ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்திய அணி பேட்டிங் பழமைவாதத்தை கொண்டுள்ளது - நாசர் உசேன்

நாசர் உசேன்

ஒரு நாள் கிரிக்கெட்டை பொறுத்தவரை இந்திய அணியின் பேட்டிங் பழமைவாதத்தை கொண்டுள்ளது என இங்கிலாந்து முன்னாள் வீரர் நாசர் உசேன் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  இந்திய கிரிக்கெட் அணி 5 வருடங்களுக்கு முன் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியது போன்றே இப்போதும் விளையாடி வருவதாக நாசன் உசேன் கூறியுள்ளார். ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற சிறந்த வீரர்கள் இந்திய அணியில் இருந்தாலும் அவர்கள் முதல் பவர் ப்ளேவில் ஸ்லோவாக ஆடுகின்றனர் என்றுள்ளார்.

  இந்திய அணியின் ஸ்லோவான தொடக்கமே ஒரு நாள் கிரிக்கெட்டில் அவர்களுக்கு பலவீனமாக உள்ளது. இங்கிலாந்து உடனான 2-வது ஒரு நாள் போட்டியில் கடைசி பத்து ஓவரில் இந்திய அணி 120 ரன்களுக்கு மேல் எடுத்தது. ஆனால் முதல் 30 ஓவர்களில் இந்திய அணி 150 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. ஒரு நாள் கிரிக்கெட்டை பொறுத்தவரை முதல் 30 ஓவர் ஸ்லோவாக விளையாடி கடைசி 20 ஓவர்களில் ரன் சேர்க்கும் பழமைவாதத்தில் இந்திய அணி தற்போதும் உள்ளது.

  இந்திய அணியின் மிடில் ஆர்டர்களில் ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, குர்ணால் பாண்டியா போன்ற அதிரடி வீரர்கள் இருப்பது போல் டாப் ஆர்டரிலும் நல்ல ஹிட்டர்ஸ் வேண்டும். இளம் வீரர்களான சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான் போனற் வீரர்களை டாப் ஆர்டரில் இந்திய அணி இறக்கி ஆரம்பம் முதலே அதிரடியாக விளைாயட வைக்க வேண்டும் என்று நாசன் உசேன் தெரிவித்துள்ளார்.

  இந்தியா அணிக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியின் 336 ரன்கள் என்ற இமலாய இலக்கை 44-வது ஓவரிலேயே இங்கிலாந்து அணி சேஷ் செய்து வெற்றி பெற்றது. இந்திய அணி பந்துவீச்சை இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் சர்வ சாதரணமாக ஊதி தள்ளினர். குறிப்பாக இங்கிலாந்து அணி தொடக்கம் யாரும் எதிர்பார்க்காத வகையில் இருந்தது.

  இங்கிலாந்து அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஜேசான் ராய், பேரிஸ்டோவ், பென் ஸ்டோக்ஸ் ருத்ரதாண்டவமாடினர். பென் ஸ்டோக்ஸ் 10 சிக்சர்களும், பேரிஸ்டோவ் 9 சிக்சர்களையும் பறக்க விட்டனர். இரு அணிகளுக்கும் இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி நாளை நடைபெறுகிறது. நாளை நடைபெறும் போட்டியில் வெற்றி பெறும் அணியே தொடரை வெல்லும் என்பதால் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.
  Published by:Vijay R
  First published: