டிம் பெய்ன் கூறிய போது, “இந்திய அணிக்கு எதிராக ஆடுவதன் சவாலில் ஒரு அங்கம் என்னவெனில் ஒன்றுமேயில்லாத விஷயத்தை பெரிது படுத்தி நமக்கு தேவையில்லாத தொல்லைகளைக் கொடுப்பார்கள், இதன் மூலம் நம் கவனத்தை திசைத்திருப்புவார்கள். அந்தத் தொடரில் நாங்கள் இதற்குப் பலியாகி விட்டோம்.
இதற்கு சிறந்த உதாரணம், பிரிஸ்பனில் ஆடமாட்டோம் என்றார்கள். அதனால் எங்கு ஆடப்போகிறோம் என்பதில் எங்களுக்கு ஐயப்பாடு எழுந்தது. இது போன்ற சீன்களை உருவாக்குவதில் இந்திய அணி கில்லாடிகள். இதனால் நாங்கள் ஆட்டத்திலிருந்து எங்கள் கண்களை எடுக்க நேரிட்டது” என்றார்.
இது தொடர்பாக விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் இந்திய விக்கெட் கீப்பர் சாபா கரீம் கூறியதாவது:
டிம் பெய்னின் இந்தக் கருத்து சிறுபிள்ளைத் தனமானது மட்டுமல்ல, முட்டாள்தனமானது. தாங்கள் செய்த தவறை மறைக்கும் செயல் இது. பொதுவாக உள்நாட்டு அணிகள்தான் அவர் கூறும் சீன்களைப் போட்டு பயணம் செய்த அணியின் கவனத்தைத் திசைத்திருப்புவார்கள். அவர் கூறுவது இந்தியாவுக்குத்தான் பெரிய அளவில் நடந்துள்ளது.
மேலும் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் இந்திய அணி பயங்கரமாக விளையாடினார்கள் என்று கூறும்போது டிம் பெய்ன் என்னடாவென்றால் இப்படி கூறுவது முட்டாள்தனம். இந்தியாவில் நல்ல பெஞ்ச் ஸ்ட்ரெந்த் உள்ளது, ஆகவே இந்தியாவிடம் தோற்றது பற்றி அவர் மோசமாக உணர வேண்டியதில்லை.
தோல்வியை ஏற்றுக் கொண்டு தவறுகளைத் திருத்திக் கொள்ள ஆஸ்திரேலியாவுக்கு இதுதான் நல்ல வாய்ப்பு. அப்போதுதான் முன்னேற முடியும். ஆனால் டிம் பெய்ன் தற்போது வேறு ஒரு கிரகத்தில் வாழ்கிறார் போல் தெரிகிறது.
இப்படி அவர் பேசினால் அவரது கேப்டன்சி நீடிக்காது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வலுவான நடவடிக்கை எடுத்து டிம் பெய்ன் விரைவில் கிரிக்கெடுக்கு பிரியாவிடை கொடுப்பார் என்று நான் கருதுகிறேன்.
என்றார் சாபா கரீம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: 2021, India vs Australia, Tim Paine