ரிஷப் பண்ட் பேட்டிங்கில் சொதப்பி வருவதால் சிலர் கே.எல்.ராகுலையே டெஸ்ட்டில் கீப்பிங் செய்ய சொல்லலாம் என்று கூறிவருவதையடுத்து கவுதம் கம்பீர் அது ஒரு மோசமான யோசனை என்று சாடியுள்ளார்.
ஸ்டார் ஸ்போர்ட்ஸில் நடந்த விவாதத்தின் போது, பேட்டிங்கில் பந்த் அலட்சியமாக செயல்படுவதால் டெஸ்ட் போட்டிகளில் விக்கெட் கீப்பிங் செய்யும்படி ராகுலிடம் கேட்கலாமா என்று ஒரு ரசிகர் கெளதம் கம்பீரிடம் கேட்டார்.
அதற்குப் பதில் அளித்த கவுதம் கம்பீர், “ராகுலை ஓப்பனர், என்று தான் சொல்வேன். எந்த விக்கெட் கீப்பராக இருந்தாலும் 150 ஓவர்கள் கீப்பிங் செய்து, பிறகு முதல் பந்தை ஆடினால், அது சாத்தியமற்றது. ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அது செயல்பட முடியும். டெஸ்ட் போட்டிகளில் வழக்கமான விக்கெட் கீப்பர் தேவை.
விக்கெட் கீப்பர் டெஸ்டில் ஓப்பனிங் பேட்டராக இருக்க முடியாது, உங்களிடம் ஓப்பனர் இல்லாத போது அது ஒரு முறை மட்டுமே நடக்கும். ஆனால் அது நீண்ட கால தீர்வாகாது. எனவே ராகுல் கீப்பராக - நிச்சயமாக இல்லை, ஏனென்றால் அவர் புதிய பந்திற்கு எதிராக ரன்கள் எடுக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள், மேலும் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டின் ரிதமுக்கு வரத் தொடங்கியுள்ளார்.
ரிஷப் பந்தைப் பற்றி பேட்டர் என்று மட்டும் ஏன் பேசுகிறோம்? கடந்த 6-7 மாதங்களில் அவரது கீப்பிங்கைப் பார்த்தால், அவர் சிறப்பாகச் செய்துள்ளார். அவர் தொடக்கத்தில் இப்போது இருப்பது போல் விக்கெட் கீப்பராக இருக்கவில்லை.
ரிஷப் பந்த் ஒரு பேட்டர் என்று முன்பு சொன்னோம், அவருடைய தாக்கம் நமக்கு 6வது நிலையில் தேவைப்பட்டது. ஆனால் கடந்த சில மாதங்களில், பந்துகள் திரும்பும் பிட்ச் ஆக சரி, தென்னாப்பிரிக்காவாக இருந்தாலும் சரி, இங்கிலாந்தாக இருந்தாலும் சரி, அவர் எப்போதாவது ஒரு முறை தவிர கேட்ச், ஸ்டம்பிங் வாய்ப்பை தவறவிட்டதாக எனக்கு நினைவில் இல்லை.
பண்ட் அணியில் அவசியம் . பந்த் ஒரு சிறந்த கீப்பராக மாறிவிட்டதால், பண்ட் 6ம் நிலையில் வெறும் தாக்கம் நிரம்பிய பேட்டராக மட்டுமே கருத முடியாது, அணியில் விக்கெட் கீப்பிங்கில் அவரது பணியும் முக்கியம்” என்று கூறி முடித்தார் கவுதம் கம்பீர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Gautam Gambhir, India vs South Africa, Kl rahul, Rishabh pant