இந்திய கிரிக்கெட்டின் முதுகெலும்பு, அடித்தளமான ரஞ்சி டிராபி பைனல் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது, ஆனால் இந்த முக்கியமான பைனலில் மும்பை அணியும் மத்திய பிரதேசமும் மோதும்போது களநடுவர் தீர்ப்புகளை மேல் முறையீடு செய்யும் டிஆர்எஸ் முறை இல்லை, கேட்டால், செலவு அதிகம் என்று காரணம் கூறுகிறார்கள்.
பிசிசிஐ பில்லியன் டாலர்களில் புரள்கிறது, ஆனால் உள்கட்டமைப்பு என்னவோ படுமோசமாக ஒழுகும் ஸ்டேடியங்களுடன் உள்ளது. ஒரு டி.ஆர்.எஸ். வைக்கக் கூட பணம் செலவாகும் என்று யோசிப்பது சிரிப்புதான் வருகிறது, சர்க்கரை விலை ஏறினால் பில் கேட்ஸ் வீட்டில் காப்பியை நிறுத்தி விடுவார்கள் என்பது போன்ற ஜோக்காக இருக்கிறது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இன்று சதம் எடுத்து மேன்மேலும் செல்ல ஆசைப்படும் ரன் மெஷின் சர்பராஸ் கான் நேற்று மத்தியப் பிரதேச வேகப்பந்து வீச்சாளர் கவுரவ் யாதவ் பந்தில் எல்.பி.யில் தப்பினார். டி.ஆர்.எஸ் இருந்திருந்தால் ஒருவேளை அது அவுட் என்று கூட தீர்ப்பளிக்கப்பட்டிருக்கலாம். இன்று அவர் தன் சதத்தின் மூலம் மும்பையை 350 ரன்களுக்கு கொண்டு சென்றுள்ளார், இது கோப்பையை தீர்மானிக்கும் விஷயமாகும், இதில் தீர்ப்பு மறுமதிபீட்டு முறை இல்லை என்றால் நகைப்பாக உள்ளது, அதுவும் செலவாகும் என்று கூறுவது சிரிப்பைத்தான் வரவழைக்கிறது.
புஜாரா போன்றோர் தப்பிப்பதற்கு இதுவே காரணம்:
2018-19 ரஞ்சி டிராபி செமிபைனலைப் பார்த்திருந்தால் தெரியும். சவுராஷ்ட்ரா- கர்நாடகா அணிகள் மோதின. இதில் இந்திய டெஸ்ட் ஸ்டார், இந்தியாவின் புதிய சுவர் புஜாரா டி.ஆர்.எஸ். இல்லாததால் இருமுறை பயனடைந்தார். எல்.பி.யாக இருந்தால் பரவாயில்லை, இருமுறையும் விக்கெட் கீப்பர் கேட்ச் கிளீன் எட்ஜ் புஜாரா அவுட், ஆனால் களநடுவர் தீர்ப்பு நாட் அவுட். புஜாராவுக்கும் மனசாட்சி இல்லை.
இதனா முதல் இன்னிங்ஸில் 45 எடுத்த புஜாரா இரண்டாவது இன்னிங்ஸில் 131 ரன்கள் எடுத்தார், சவுராஷ்ட்ரா போட்டியை வென்று இறுதிக்குள் சென்றது.
டெக்னாலஜி மிகவும் செலவு பிடிப்பது என்று பிசிசிஐ கருதுகிறதாம். களநடுவர்கள் மீது அபரிமிதமான நம்பிக்கை வைத்திருக்கிறதாம் பிசிசிஐ என்று முன்னணி ஆங்கில நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: BCCI, Ranji Trophy