பாகிஸ்தான் லீக் அணியின் கிண்டலான பதிவுக்கு இந்திய ரசிகர்கள் பதிலடி!

பாகிஸ்தான் லீக் அணியின் கிண்டலான பதிவுக்கு இந்திய ரசிகர்கள் பதிலடி!
  • Share this:
கொரோனா தொற்று காரணமாக மக்கள் வீட்டில் இருந்து வெளியே வராமல் இருப்பதை அறிவுறுத்தும் விதமாக பாகிஸ்தான் கிரிக்கெட் லீக் அணி பும்ரா நோ-பால் வீசிய புகைப்படத்தை பதிவு செய்துள்ளது.

உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ள கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க மக்கள் வீட்டிலேயே இருப்பது மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் பங்கேற்கும் இஸ்லாாமாபாத் யுனைடெட் அணி கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பும்ரா நோ-பால் வீசும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளது.


2017ம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் நோ-பால் வீசிய பும்ராவின் புகைப்படம் இது. இந்த போட்டியில் தொடக்க வீரர் ஃபகார் ஜமான் ஆரம்பத்திலேயே பும்ரா வீசிய பந்தில் அவுட்டானார்.

ஆனால் அது நோ-பாலாக அமைந்தது. அந்த போட்டியில் ஜமான் 114 ரன்கள் சேர்ப்பார். பாகிஸ்தான் வெற்றிக்கு பும்ரா வீசிய நோ-பால் முக்கிய காரணமாக அமைந்தது. இதன் காரணமாகவே இந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளனர்.மேலும் அந்த பதவில், “எல்லைக் கோட்டை தாண்டி வெளியே வர வேண்டாம். அப்படி வந்தால் அதற்கு அதிக விலை கொடுக்க நேரிடும். வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். உடலால் பிரிந்து உள்ளத்தால் இணைந்திருப்போம்“ என்றும் பதிவிட்டுள்ளனர்.

இஸ்லாாமாபாத் லீக் அணியின் ட்விட்டர் பதிவிற்கு இந்திய ரசிகர்கள் பதிலடி கொடுக்கும் விதமாக, லாரட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் அசாதரண நோ-பால் வீசிய முகமது அமீரின் உள்ளிட்டவற்றை பதிவு செய்துள்ளனர்.சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

First published: April 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading