“பார்த்த நொடியிலேயே காதலில் விழுந்துவிட்டேன்“ இஷாந்த் சர்மாவின் காதல் கதை

“பார்த்த நொடியிலேயே காதலில் விழுந்துவிட்டேன்“ இஷாந்த் சர்மாவின் காதல் கதை
இஷாந்த் சர்மா - பிரதீமா சிங்
  • Share this:
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா தனது மனைவியுடனான காதல் கதையை முதன்முறையாக வெளிஉலகிற்கு கூறியுள்ளார்.

இஷாந்த் சர்மா தனது காதலி பிரதீமா சிங்கை கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். உள்ளூர் கூடைப்பந்து போட்டி ஒன்றில் தான் இஷாந்த் சர்மா முதன்முறையாக பிரதீமா சிங்கை பார்த்துள்ளார். அவரை பார்த்த நொடியே காதலில் விழுந்து உள்ளார். Cricbuzz-ன் புதிய நிகழ்ச்சியில் மனைவி உடன் கலந்து கொண்ட இஷாந்த் சர்மா இதை கூறினார்.

Cricbuzz நிகழ்ச்சியின் போது இஷாந்த் சர்மா, “ என் நண்பர் அழைப்பின் காரணமாக உள்ளூர் கூடைப்பந்து போட்டி ஒன்றுக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டேன். அந்தப் போட்டியின் போது தான் பிரதீமா சிங்கை சந்தித்தேன். பார்த்த அந்த நொடியே அவர்மீது காதலில் விழுந்து விட்டேன். அவரை பார்க்க வேண்டுமென்பதற்காவே அந்த போட்டித்தொடர் முழுவதும் சென்றேன்.


இயல்பாக எனக்கு கூச்சம் சுபாவம் என்பதால் பிரதீமாவிடம் நேரிடையாக என்னால் ஏதும் பேசமுடியவில்லை. ஆனால் அவர் தங்கைகளுடன் சிரித்து இயல்பாக பேசுவேன். அதனால் அவர்கள் மீது பிரதீமா பொறாமை கூட கொண்டுள்ளார்“ என்றார்.

பிரதீமா பேசுகையில், “ஒரு முறை நான் ஆஸ்திரேலியா செல்லும் போது எனக்கு போன் செய்து உன்னிடம் முக்கியமான ஒன்று பேச வேண்டும். நீ ஆஸ்திரேலியாவில் இருந்து திரும்பிய உடன் அதை சொல்கிறேன் என்றார். அவர் என்ன சொல்வார் என்று எனக்கு முன்பே தெரிந்தது. அதன்பின் தயங்கி தான் அவர் காதலை சொன்னார். நானும் அதற்கு சம்மதம் தெரிவித்தேன்“ என்றார்.

திருமணத்திற்கு பின் என் வாழ்க்கை முற்றிலும் மாறிவிட்டதாக கூறிய இஷாந்த் சர்மா, “கிரிக்கெட் பயிற்சி, ஜிம், நண்பர்கள் என்று இருந்த நான் திருமணத்திற்கு பின் பிரதீமா உடன் ஊர் சுற்ற ஆரம்பித்துவிட்டேன். அதே வேளை பல பொறுப்புகளும் எனக்கு வந்துவிட்டது“ என்று தனது காதல் அனுபவத்தை உணர்ச்சிப் பொங்க கூறினார்.
First published: March 19, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்