தொடர்ந்து 15 நாட்கள் கதறிக் கதறி அழுதேன் தெரியுமா? இஷாந்த் சர்மா உருக்கம்!

#IshantSharma cried for 15 days | சுமார் 6 ஆண்டுகளுக்குப்பின், மொஹாலியில் நடந்த ஒரு நாள் போட்டி குறித்து இஷாந்த் சர்மா உருக்கம். #AUSvIND #INDvAUS

தொடர்ந்து 15 நாட்கள் கதறிக் கதறி அழுதேன் தெரியுமா? இஷாந்த் சர்மா உருக்கம்!
இஷாந்த் சர்மா. (BCCI)
  • News18
  • Last Updated: January 22, 2019, 4:28 PM IST
  • Share this:
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் என்னால் இந்திய அணி தோல்வி அடைந்ததால், தொடர்ந்து 15 நாட்கள் கதறிக் கதறி அழுதேன் என இஷாந்த் சர்மா உருக்கமாக கூறியுள்ளார்.

கடந்த 2013-ம் ஆண்டு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு டி-20 மற்றும் 7 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. முதலில் நடந்த டி-20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஒரு நாள் தொடரில் முதல் இரண்டு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றிருந்தன. 3-வது போட்டி மொஹாலியில் நடந்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, அப்போதைய கேப்டன் மகேந்திர சிங் தோனியின் அதிரடி சதத்தால், 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 303 ரன்கள் குவித்தது.


Dhoni, தோனி
மகேந்திர சிங் தோனி. (ICC)


304 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணிக்கு, கடைசி 18 பந்துகளில் 44 ரன்கள் தேவைப்பட்டது. 48-வது ஓவரை இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா வீசினார். அந்த ஓவரை ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் ஜேம்ஸ் ஃபால்க்னர் துவம்சம் செய்தார்.

ஃபால்க்னர், 4, 6, 6, 2, 6, 6 என மொத்தம் 30 ரன்கள் விளாசினார். இஷாந்த் சர்மாவின் இந்த ஓவர் போட்டியின் முடிவை மாற்ற முக்கிய காரணமாக இருந்தது. இந்தப் போட்டியில் ஃபால்கரின் அதிரடியால் ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Loading...

Ishant Sharma, இஷாந்த் சர்மா
ஒரே ஓவரில் 30 ரன்களை வாரிய வழங்கிய இஷாந்த் சர்மா. (PTI)


இந்நிலையில், சுமார் 6 ஆண்டுகளுக்குப்பின், அந்தப் போட்டி குறித்து இஷாந்த் சர்மா கூறுகையில், “என்மீது நானே மிகவும் கோபமாக இருந்தேன். என்னால் இந்திய அணி தோல்வி அடைந்ததை தாங்குக்கொள்ள முடியவில்லை. நான் ஒரு நாள் மட்டும் அழவில்லை, குறைந்தபட்சம் 15 நாட்களுக்கு கதறி கதறி அழுதிருப்பேன்” என்று தெரிவித்தார்.

இறுதியில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை 3-2 என இந்திய அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

#ICCAwards வளர்ந்துவரும் கிரிக்கெட் வீரர் விருதை வென்ற ரிஷப் பண்ட்!

Also Watch...

First published: January 22, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...