ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

‘நியூசி.-க்கு எதிரான ஒருநாள் போட்டியில் இஷான் கிஷன் விளையாடுவார்’ – கேப்டன் ரோஹித் சர்மா

‘நியூசி.-க்கு எதிரான ஒருநாள் போட்டியில் இஷான் கிஷன் விளையாடுவார்’ – கேப்டன் ரோஹித் சர்மா

இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்மா

இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்மா

எதிரணி வலுவான அணி என்பதில் சந்தேகம் கிடையாது. அதேநேரம் எங்களுடைய வெற்றிப் பயணத்தை தொடர்வதற்கு இது ஒரு வாய்ப்பு. – ரோஹித் சர்மா

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில்  இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேனும், விக்கெட் கீப்பருமான இஷான் கிஷன் இடம்பெறுவார் என்று கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார். இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணியுடன் இந்திய அணி பங்கேற்கும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாளை தொடங்கவுள்ளது. இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை அட்டகாசமாக கைப்பற்றிய நிலையில், இந்திய அணி அடுத்த அசைன்மென்டுக்கு தயாராகியுள்ளது. 3 போட்டிகளைக் கொண்டதாக நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர் விளையாடப்படவுள்ளது. முதல் ஆட்டம் ஐதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் நாளை தொடங்குகிறது.

இந்த போட்டியில் இந்திய அணி தரப்பில் முன்னணி பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா காயம் காரணமாக பங்கேற்க மாட்டார். இதேபோன்று ரவிந்திரா ஜடேஜாவுக்கு உடல் தகுதி பிரச்னை காரணமாக விளையாட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. மற்றொரு முக்கிய ஆட்டக்காரரான பேட்ஸ்மேன் ஷ்ரேயாஸ் ஐயருக்கு முதுகில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவரும் விளையாட மாட்டார்.  இதேபோன்று தனிப்பட்ட காரணங்களுக்காக கே.எல்.ராகுல் மற்றும் அக்சர் படேல் ஆகியோர் இடம்பெறவில்லை.

முக்கிய வீரர்களின் விலகல் காரணமாக இளம் வீரர்களுக்கு  அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போட்டி நாளை தொடங்கவுள்ள நிலையில் கேப்டன் ரோஹித் சர்மா அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது- எந்த குழப்பமும் இல்லாமல் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளோம். ஒட்டுமொத்தமாக பேட்டிங், பவுலிங் மற்றும் ஃபீல்டிங்கில் இன்னும்  சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதுதான் எங்களுடைய இலக்கு. எதிரணி வலுவான அணி என்பதில் சந்தேகம்  கிடையாது.

அதேநேரம் எங்களுடைய வெற்றிப் பயணத்தை தொடர்வதற்கு இது ஒரு வாய்ப்பு. பாகிஸ்தான் அணியை தோற்கடித்து விட்டு நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு வந்துள்ளது. இந்த போட்டியில் இஷான் கிஷன் ஆடும் லெவனில் இடம்பெறுவார். மிடில் ஆர்டர் வரிசையில் அவர் களம் இறங்குவார். இவ்வாறு அவர் கூறினார்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் –

ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், கே.எஸ். பரத் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா (துணை கேப்டன்), ரஜத் பட்டிதார், வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது, ஷர்துல் தாகூர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகம்மது சிராஜ், உம்ரான் மாலிக்.

First published:

Tags: Cricket