முகப்பு /செய்தி /விளையாட்டு / வாய்ப்புகளை வீணடித்த கே.எஸ். பரத்… ஆடும் லெவனில் இடம்பெறுவாரா இஷான் கிஷன்?

வாய்ப்புகளை வீணடித்த கே.எஸ். பரத்… ஆடும் லெவனில் இடம்பெறுவாரா இஷான் கிஷன்?

கே.எஸ்.பரத் - இஷான் கிஷன்

கே.எஸ்.பரத் - இஷான் கிஷன்

முதல் 2 போட்டிகளில் படுதோல்வியை சந்தித்த ஆஸ்திரேலிய அணி 3 ஆவது போட்டியில் இந்தியாவை வீழ்த்தி எழுச்சி பெற்றுள்ளது

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 3 போட்டிகளில் விளையாட கே.எஸ். பரத்திற்கு வாய்ப்பு அளிக்கப்பட்ட நிலையில் அவர் ஒரு அரைச்சதம் கூட இந்த தொடரில் அடிக்கவில்லை. 3 போட்டிகளில் மொத்தமே அவர் 57 ரன்கள் எடுத்துள்ள நிலையில் இஷான் கிஷனுக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன. நாளை தொடங்கும் 4ஆவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறுவதன் மூலம், இந்திய அணி தொடரைக் கைப்பற்றுவதுடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு எளிதாக முன்னேறி விடும். இல்லாவிட்டால் நியூசிலாந்து – இலங்கை இடையிலான டெஸ்ட் போட்டிகளின் முடிவுக்காக இந்திய அணி காத்திருக்க வேண்டும்.

மேலும் கடைசி டெஸ்டில் வெற்றி பெற்றால் ஐசிசி டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசையில் இந்திய அணி முதலிடத்திற்கு முன்னேறி விடும். இதனால், கட்டாய வெற்றி என்ற முனைப்புடன் இந்திய அணி வீரர்கள் நாளை விளையாடவுள்ளனர். அதேநேரம் முதல் 2 போட்டிகளில் படுதோல்வியை சந்தித்த ஆஸ்திரேலிய அணி 3 ஆவது போட்டியில் இந்தியாவை வீழ்த்தி எழுச்சி பெற்றுள்ளது. ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான அந்த அணி நாளை தொடங்கும் போட்டியில் வெற்றி பெற கடுமையாக போராடும் என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக அமையும் என்பதில் சந்தேகம் இருக்காது.

இந்நிலையில் இந்திய அணியின் ஆடும் லெவனில்  விக்கெட் கீப்பர் இஷான் கிஷனுக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன. முதல் 3 போட்டிகளில் கே.எஸ்.பரத் விக்கெட் கீப்பராக செயல்பட்டார். அவர் குறிப்பிடத்தகுந்த வகையில் ரன் எடுக்கவில்லை. 3 போட்டிகளில் அவர் மொத்தமே 57 ரன்களை எடுத்துள்ளார். இதனால் அவருக்கு பதிலாக நாளைய போட்டியில் இஷான் கிஷன் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உத்தேசமாக இந்திய அணியில், கேப்டன் ரோஹித் சர்மா, சுப்மன் கில், செதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், அக்சர் படேல், ரவிந்திர ஜடேஜா, இஷான் கிஷன், அஷ்வின், உமேஷ் யாதவ், முகம்மது சிராஜ் ஆகியோர் இடம்பெற அதிக வாய்ப்புகள் உள்ளன.

First published:

Tags: Cricket