முகப்பு /செய்தி /விளையாட்டு / ‘இது முதல் முறையல்ல…’ – மோசமாக விளையாடும் இஷான் கிஷனுக்கு முன்னாள் வீரர் எச்சரிக்கை

‘இது முதல் முறையல்ல…’ – மோசமாக விளையாடும் இஷான் கிஷனுக்கு முன்னாள் வீரர் எச்சரிக்கை

இஷான் கிஷன்

இஷான் கிஷன்

தொடர்ச்சியாக பெரும்பாலான போட்டிகளில் ரன்களை குவிக்க வேண்டும். அப்போதுதான் அணியில் நமக்கு இடம் கிடைக்கும்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்திய அணியின் பேட்ஸ்மேனும் விக்கெட் கீப்பருமான இஷான் கிஷன தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் அவர் குறைந்த ரன்னில் அவுட் ஆகுவது முதல் முறையல்ல என்றும், அணியில் நீடிக்க இந்த திறமை போதாது என்றும் முன்னாள் வீரரும், தேர்வுக்குழு உறுப்பினருமான சபா கரிம் எச்சரிக்கை விடுத்துள்ளார். வங்கதேச அணிக்கு எதிரான 3 ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் இஷான் கிஷன் இரட்டை சதம் அடித்து கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பினார்.

வங்கதேசத்தை தொடர்ந்து, இலங்கை அணிக்கு எதிரான டி20 மற்றும் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டிகளில் இஷான் கிஷனின் ஆட்டம் மோசமாக இருந்தது. குறிப்பாக நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 டி20 போட்டிகளிலும் இஷான் கிஷன் 30 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இரட்டை சதம் அடித்த வீரரா இப்படி விளையாடுகிறார் என்று முன்னாள் வீரர்களும், கிரிக்கெட் வர்ணனையாளர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் இஷானின் ஆட்டம் குறித்து தேர்வுக்குழு முன்னாள் உறுப்பினர் சபா கரீம் கூறியதாவது- மோசமான ஆட்டத்தை இஷான் கிஷன் ஒன்றும் முதன்முறையாக வெளிப்படுத்தவில்லை. 2021 டி20 உலகக்கோப்பைக்கு முன்னதாக அதிக ரன்களை அவர் குவித்தார். ஆனால் அந்த உலகக்கோப்பை தொடரில் அவர் ரன் எடுக்கவில்லை.

எனவேதான் அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டிருந்தார். தொடர்ச்சியாக பெரும்பாலான போட்டிகளில் ரன்களை குவிக்க வேண்டும். அப்போதுதான் அணியில் நமக்கு இடம் கிடைக்கும். ஷாட்களை தேர்வு செய்வதில் இஷான் கிஷன் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரிஷப் பந்த்திற்கு காயம் ஏற்பட்டிருப்பதால் அவருக்கு பதிலாக இஷான் கிஷன் அணியில் இடம்பெற்றுள்ளார். இன்னொரு விக்கெட் கீப்பரான கே.எஸ்.பரத்தும் அணியில் உள்ளார். தொடர்ந்து மோசமான ஆட்டத்தை இஷான் வெளிப்படுத்தி வரும் நிலையில் அவருக்கு பதிலாக பரத்திற்கு வாய்ப்பு அளிக்கப்படுமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

First published:

Tags: Cricket