அதிரடி இளம் பேட்ஸ்மேன் இஷான் கிஷன் ரஞ்சி தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். கேரள அணிக்கு எதிராக அவர் அடித்த சதத்தால் ஜார்க்கண்ட் அணி சரிவிலிருந்து மீண்டுள்ளது.
இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனாக இஷான் கிஷன் உருவெடுத்து வருகிறார். வங்கதேசத்திற்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் 210 ரன்கள் எடுத்து சர்வதேச கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை பெற்றார் இஷான் கிஷன்.
அடுத்தடுத்த ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இஷானுக்கு வாய்ப்புகள் தொடர்ந்து வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மும்பை அணியின் ஸ்டார் பேட்ஸ்மேனாக ரசிகர்களின் கவனத்தை பெற்ற இஷான் கிஷன், தற்போது சர்வதேச அளவில் ரசிகர்களை பெற்றுள்ளார்.
கில், புஜாரா சதம் அடித்து அசத்தல்: 512 ரன்களில் இந்திய அணி டிக்ளேர்
தற்போது டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடி வரும் நிலையில், இஷான் ரஞ்சி கோப்பை தொடரில் ஜார்க்கண்ட் அணியில் இடம்பெற்று விளையாடி வருகிறார். இதில் கேரளாவை ஜார்க்கண்ட் எதிர்கொண்டுள்ளது.
முதல் இன்னிங்ஸில் கேரள அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 475 ரன்களை குவித்தது. தொடர்ந்து ஆடிய ஜார்க்கண்ட் அணி 340 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 114 ரன்களுக்கு 4 விக்கெட் என்ற நிலையில் ஜார்க்கண்ட் இருந்தபோது களத்தில் இறங்கிய இஷான் கிஷன் அதிரடியாக ரன்களை சேர்த்தார்.
‘ரிஷப் பண்ட் குண்டாக இருக்கிறார்’ – பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் கருத்து
195 பந்துகளை எதிர்கொண்ட அவர் 8 சிக்சர் மற்றும் 9 பவுண்டரிகளுடன் 132 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். இரண்டாவது இன்னிங்ஸில் கேரள அணி 7 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்களை எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.
இதையடுதது 323 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜார்க்கண்ட் அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் கேரள அணியே வெற்றி பெற அதிக வாய்ப்புகள் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricket, Ranji Trophy