• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • விராட் கோலி நம்பர் 1 டெஸ்ட் கேப்டனா?- சாதகமான  ஆட்டக்களங்கள், பலவீனமான அணிகளுடனேயே அதிக வெற்றிகள்

விராட் கோலி நம்பர் 1 டெஸ்ட் கேப்டனா?- சாதகமான  ஆட்டக்களங்கள், பலவீனமான அணிகளுடனேயே அதிக வெற்றிகள்

விராட் கோலி

விராட் கோலி

இந்தியாவின் நம்பர் 1 கேப்டன் என்று விதந்தோதப்படுபவர் விராட் கோலி, ஆனாலும் ரசிகர்கள் நினைவில் நிற்பது ஐசிசி டிராபிக்களான உலகக்கோப்பையை வெல்வதாகும். நம்பர் 1 கேப்டன் என்று விராட் கோலி கூறப்பட்டாலும் அவரது கேப்டன்சி திறமைகள் உருவாக்கப்பட்ட ஒன்று, கட்டமைக்கப்பட்ட ஒன்று என்பதை அவர் ஆரம்பகாலத்தில் கேப்டனாக ஆடிய தொடர்களை ஆராய்ந்தாலே தெரிந்து விடும். 

  • Share this:
இந்தியாவின் நம்பர் 1 கேப்டன் என்று விதந்தோதப்படுபவர் விராட் கோலி, ஆனாலும் ரசிகர்கள் நினைவில் நிற்பது ஐசிசி டிராபிக்களான உலகக்கோப்பையை வெல்வதாகும். நம்பர் 1 கேப்டன் என்று விராட் கோலி கூறப்பட்டாலும் அவரது கேப்டன்சி திறமைகள் உருவாக்கப்பட்ட ஒன்று, கட்டமைக்கப்பட்ட ஒன்று என்பதை அவர் ஆரம்பகாலத்தில் கேப்டனாக ஆடிய தொடர்களை ஆராய்ந்தாலே தெரிந்து விடும்.

கோலியை ஒரு கேப்டன் மற்றும் வீரராக ஒரு பிராண்ட் என்பதைக் கட்டமைக்க ஆரம்பகாலங்களில் சாதகமான தொடர்களையே இந்தியா ஆடுமாறு அமைந்தது.

2014-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தோனி கேப்டன்சியை உதறியபோது கேப்டன் ஆன விராட் கோலி. அந்த தொடர் முடிந்தவுடன் அவருக்காக ஏற்பாடு செய்யப்பட்ட தொடர்களை நாம் பார்க்க வேண்டும்.

கோலி-ரகானே. | உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் 2021.


பங்களாதேஷுக்கு எதிராக ஒரு மேட்ச் ஆடி அது ட்ரா ஆனது. 2015-16 இலங்கைக்கு எதிரான தொடரில் முதல் மேட்சை இந்தியா இழந்தது, அதற்கு அடுத்து 2 போட்டிகளில் வென்று டெஸ்ட் தொடரை 2-1 என்று கைப்பற்றியது, சங்கக்காராவின் கடைசி தொடர் அது என்பதால் அவரும் சரியான பார்மில் இல்லை, அவரை அஸ்வின் வீழ்த்திக் கொண்டே இருந்தார். இந்த இலங்கை வெற்றி இந்தியா போன்ற குழிப்பிட்ச் ரகமே. இதில் அவர் வென்றார்.

அடுத்து தென் ஆப்பிரிக்காவை இந்தியாவுக்கு அழைத்து குழிப்பிட்சில் தொடரை 2-0 என்று வென்றனர் அடுத்து சொத்தையான மே.இ.தீவுகளுடன் மே.இ.தீவுகளில் டெஸ்ட் தொடர் அங்கு போய் 1-0 என்று கோலி தலைமையில் வென்றோம். அடுத்து மீண்டும் நியூசிலாந்தை இந்தியாவுக்கு அழைத்து குழிப்பிட்சில் அந்த அணியை 3-0 என்று காலி செய்தோம். அடுத்து இங்கிலாந்தை 2016-17 இந்தியாவுக்கு அழைத்தோம் மீண்டும் குழிப்பிட்சைப் போட்டு 4-0 என்று அவர்களைக் காலி செய்தோம். மீண்டும் பங்களாதேஷை அழைத்து ஒரு டெஸ்ட் போட்டியை வென்றோம்.

Also Read: படங்கள்- யூரோ 2020 சாம்பியன் இத்தாலி: முக்கியத் தருணங்கள்

2017 ஆஸ்திரேலியாவை இங்கு அழைத்தோம் அந்தத் தொடர் கொஞ்சம் பரவாயில்லை. ஆஸ்திரேலியா முதல் போட்டியை வென்றது, குழிப்பிட்ச் இந்த முறை இந்தியாவுக்கு எதிராகத் திரும்பியது. ஆனால் அந்தத் தொடரில் 2 டெஸ்ட் போட்டிகளை இந்தியா வென்று 2-1 என்று தொடரைக் கைப்பற்றியது. இதில் ஒரு டெஸ்ட் வெற்றி ரகானே தலைமையில் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகவே கோலி கேப்டன்சிக்கு வந்த உடனே அவரது மதிப்பை ஏற்ற, அதாவது வணிக மதிப்பை ஏற்ற ஏகப்பட்ட தொடர்கள் இந்தியாவிலேயே ஏற்பாடு செய்யப்பட்டன. அதன் பிறகு மீண்டும் சொத்தையான இலங்கையுடன் அங்கு சென்று 3 டெஸ்ட், இங்கு அவர்கள் உடனேயே வந்து 3 டெஸ்ட், இதில் 5 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா வென்றது, இப்படி எங்காவது பார்த்திருக்கிறோமா? இலங்கையுடன் 2017-18ல் 6 டெஸ்ட் போட்டிகளை இந்தியா விளையாடியது.

அடுத்துப் பார்த்தால் தென் ஆப்பிரிக்காவுக்கு சென்று 1-2 என்று உதை, இங்கிலாந்துக்கு சென்ரு 1-4 என்று செம உதை. இடையே ஆப்கானிஸ்தானை இங்கு அழைத்து ஒரு சொத்தை வெற்றியைப் பெற்றோம். பிறகு மீண்டும் சொத்தை வெஸ்ட் இண்டீஸை இங்கு அழைத்து 2 டெஸ்ட் போட்டிகளையும் வென்றோம்.

அதன் பிறகுதான் ஆஸ்திரேலியா தொடரில் விராட் கோலி 2-1 என்று முதன் முதலாக ஆஸ்திரேலிய மண்ணில் தொடரைக் கைப்பற்றினார். உடனே சொத்தையான வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஒரு தொடரை 2-0 என்று வென்றோம். பிறகு தென் ஆப்பிரிக்காவை இங்கு அழைத்து மகா மட்டமான குழிப்பிட்சை போட்டு 3-0 என்று வென்றது இந்திய அணி. பிறகு பங்களாதேஷைக் கூப்பிட்டு மீண்டும் ஒரு 2-0 வெற்றி பெற்றோம்.

ஆகவே 2014-15 தொடரில் விராட் கோலி கேப்டன்சி எடுத்ததிலிருந்து இலங்கை, வங்கதேசம், வெஸ்ட் இண்ட்டீஸ் போன்ற சொத்தை அணிகளை அங்கும் இங்கும் வென்றது ,ஆனால் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து அணிகளை இங்கு அழைத்து குழிப்பிட்சைப் போட்டு காலி செய்துள்ளோம். இதில் விராட் கோலியின் கேப்டன்சி திறமை என்ன இருக்கிறது? இந்த உள்நாட்டு தொடர்களை இந்திய அணி கேப்டன் என்று யாரும் இல்லாமலேயே வென்றிருக்க முடியும்.

அதன் பிறகுதான் நியூசிலாந்துக்கு போய் 0-2 உதை, பிறகு அடிலெய்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 36 ஆல் அவுட் தோல்வி அதன் பிறகு ரகானே அற்புதமாக கேப்டன்சி செய்து இந்தியா தொடரை 2-1 என்று வென்றது. அதில் தான் இல்லாமல் இந்திய அணி வென்றது அவருக்கு ஒருவிதத்தில் இந்தத் தொடரிலிருந்து நாம் விலகியிருக்கக் கூடாது என்ற எண்ணத்தை ஏற்படுத்தியிருக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சரி மீண்டும் வந்தாரா? இங்கிலாந்துக்கு எதிராக சென்னையில் பெரிய தோல்வியை சந்தித்தார். ஆனால் அடுத்தடுத்த டெஸ்ட் போட்டிகளில் சர்ச்சைக்குரிய வகையில் முதல் பந்திலிருந்தே மண் பெயர்ந்து வரும் குழிப்பிட்களைப் போட்டு இங்கிலாந்தை வென்று ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா முன்னேறி அங்கு போய் நியூசிலாந்திடம் படுதோல்வி அடைந்து ஐசிசி கோப்பை இன்னொன்றையும் தவற விட்டார் விராட் கோலி.

ஆகவே தரமான எத்தனை அணிகளுடன் விராட் கோலி கேப்டன்சியில் இந்திய அணி வென்றுள்ளது என்பது மிகப்பெரிய கேள்வியே. இந்நிலையில் இங்கிலாந்தில் வரும் 5 டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி பெரிதாக என்ன செய்து விட முடியும் என்ற கேள்வியே எஞ்சுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Muthukumar
First published: