இலங்கையின் அடுத்த மலிங்கா ரெடி...! 7 ரன்கள் கொடுத்து 6 விக்கெட் எடுத்து அசத்தல் - வீடியோ

இலங்கையின் அடுத்த மலிங்கா ரெடி...! 7 ரன்கள் கொடுத்து 6 விக்கெட் எடுத்து அசத்தல் - வீடியோ
  • News18 Tamil
  • Last Updated: September 27, 2019, 3:15 PM IST
  • Share this:
இலங்கையில் நடந்த உள்ளூர் போட்டி ஒன்றில் மலிங்கா ஸ்டைலில் பந்துவீசிய 17 வயது இளம்வீரர் 6 விக்கெட்களை வீழ்த்தி அசத்தி உள்ளார்.

இலங்கையின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா ஒரு நாள் மட்டும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். டி20 கிரிக்கெட் போட்டிகளில் மட்டும் இலங்கை அணிக்காக விளையாடி வருகிறார்.

மலிங்கா 225 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 335 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார். சர்வதேசப் போட்டிகளில் பந்துவீசும் பவுலர்களுக்கு என்று தனி ஸ்டைல் இருக்கும். அதில் மிகவும் மாறுப்பட்டவர் மலிங்கா. மலிங்கா பந்துவீசுவது ஒடிவந்து எறிவது போல் இருந்தாலும் துல்லியமான யாக்கர் இருக்கு. சரியான தருணத்தில் மெதுவாக பந்துவீசி விக்கெட் வீழ்த்துவதிலும் வல்லவர்.


இலங்கையில் வளர்ந்து வரும் வேகப்பந்து வீச்சாளர்க்கு மலிங்கா தான் ரோல்மாடல் என்று சொல்லலாம். அவரை போல பந்துவீசி 7 ரன்களுக்கு 6 விக்கெட் வீழ்த்தி உள்ளார் இளம் வீரர் மத்தீஷா பதிரானா.இலங்கையில் நடந்த உள்ளூர் போட்டியில் இவரது வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட் வீழ்ந்த வண்ணம் உள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Also Watch

First published: September 27, 2019, 3:15 PM IST
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading