கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இடையே ஈகோ பிரச்னை இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் அது எந்த அளவுக்கு உண்மை என்பது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா விளக்கம் அளித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய ரகசிய ஆபரேஷனில் சேத்தன் சர்மா மனம் திறந்து பேசியுள்ளார்.இதில் விராட் கோலி – கங்குலி இடையிலான மோதல் போக்கு, இந்திய வீரர்களின் உடல் தகுதி தேர்வு உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் குறித்து விவரித்துள்ளார். விராட் கோலி – ரோஹித் சர்மா இடையிலான உறவு குறித்து சேத்தன் சர்மா கூறியதாவது-
ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டனாக செயல்பட ரோஹித் சர்மா விருப்பமாக இருந்தார். இது ஒரு ஈகோ பிரச்னை. கேப்டன் பொறுப்பிலிருந்து தான் நீக்கப்பட்ட கங்குலிதான் காரணம் என கோலி நினைத்தார். அவருக்கு பாடம் கற்பிக்கத்தான், மீடியாக்கள் முன்பு கங்குலியை அவமானப்படுத்தினார். ஆனால் அவர் பேசியது அவருக்கு எதிராகவே மாறி விட்டது. வெள்ளைப் பந்து (ஒன்டே, டி20) ஆட்டங்களுக்கு 2 கேப்டன்கள் இருக்க கூடாது என்று பிசிசிஐ எண்ணியது. அதனால்தான், கோலி மாற்றப்பட்டார். கேப்டன்களை நியமிப்பது தேர்வுக்குழுவின் வேலை. இது எப்போது நடக்கும் சாதாரண நடைமுறைதான். இது விராட் கோலிக்கும் தெரியும்.
ஆனால் கோலிக்கும், ரோஹித் சர்மாவுக்கும் இடையே பெரிய பிரச்னை, பிளவு என்று ஏதும் இல்லை. எல்லாம் மீடியாக்களின் ஊகச் செய்திதான். ஓரிடத்தில் மிகப்பெரும் 2 நட்சத்திரங்கள் இருக்கும்போது சிறதளவு ஈகோ இருக்கத்தான் செய்யும். இது அமிதாப் பச்சனுக்கும், தர்மேந்திராவுக்கும் இடையில் இருக்கும் ஈகோவைப் போன்றது. எதுவெல்லாம் கிடையாதோ அதுவெல்லாம் இருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. உண்மையிலேயே விராட் கோலியும், ரோஹித் சர்மாவும் ஒருவருக்கொருவர் உதவிகரமாக செயல்பட்டனர். விராட் கோலி ரன் எடுக்க திணறியபோது, ரோஹித் ஆலோசனைகளை வழங்கினார். ரோஹித்தின் மோசமான தருணங்களில் கோலி உதவியாக இருந்தார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricket