பிரபல நடிகையுடன் கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் டேட்டிங்?

KL Rahul | Athiya Shetty | கடந்த பிப்ரவரி மாதம் முதலே இவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

Web Desk | news18
Updated: June 28, 2019, 9:35 PM IST
பிரபல நடிகையுடன் கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் டேட்டிங்?
கே.எல்.ராகுல் - அதியா ஷெட்டி
Web Desk | news18
Updated: June 28, 2019, 9:35 PM IST
கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல், இந்தி நடிகை அதியா ஷெட்டியும் காதலில் இணைந்து டேட்டிங்கில் இருந்து வருவதாக கூறப்படுகிறது.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை போட்டிகளில் இந்திய வீரர் கே.எல்.ராகுல் சிறப்பாக விளையாடி வருகிறார். 4வது வீரராக களமிறங்கி வந்த ராகுல் ஷிகார் தவான் காயம் காரணமாக விலகியதால் தொடக்க வீரராக களமிறங்கி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

கே.எல்.ராகுலும் இந்தி நடிகை அதியா ஷெட்டியும் காதலித்து வருவதாக செய்திகள் பாலிவுட்டில் செய்திகள் பரவின. இந்த செய்தி குறித்து இவர்களும் பதில் அளிக்காமல் மௌனம் காத்து வந்தனர்.

 

Loading...

View this post on Instagram
 

...n i’m so good with that 💛


A post shared by 🦋Kanch (@akansharanjankapoor) on


கே.எல்.ராகுல், நடிகை அதியா ஷெட்டி டேட்டிங்கில் இருந்து வருவதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் முதலில் இவர்கள் இருவரும் நண்பராக பழகி வந்தனர். நட்பாக பழகிய இவர்களிடையே காதல் மலர்ந்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் முதலே இவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளனர். அவர்கள் இருவரும் எடுத்து கொண்ட புகைப்படத்தை அவரது தோழி ரஞ்சனா கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனால் இவர்களின் காதல் வெளிப்படையாகவே தெரிய வந்துள்ளது என கூறுகின்றனர்.

Also Read : ”அது நம்மள நோக்கித்தான் வருது... படுங்க...'' இலங்கை - தென்னாப்பிரிக்கா போட்டியில் சுவாரஸ்ய நிகழ்வு

Also Watch

First published: June 28, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...