ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

‘ரோகித்துடன் இணைந்து தொடக்க வீரராக விளையாட இவர்தான் பொருத்தமானவர்’ – இளம் வீரரை தேர்வு செய்த இர்பான்பதான்

‘ரோகித்துடன் இணைந்து தொடக்க வீரராக விளையாட இவர்தான் பொருத்தமானவர்’ – இளம் வீரரை தேர்வு செய்த இர்பான்பதான்

ரோகித் சர்மா

ரோகித் சர்மா

வங்கதேச தொடரில் இந்திய அணியில் இடம்பெற்ற இஷான் கிஷன் இரட்டை சதத்தை எளிதாக அடித்து கவனம் ஈர்த்தார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ரோகித் சர்மாவுடன் இணைந்து தொடக்க வீரராக விளையாட இளம் வீரர் ஒருவரை முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான்பதான் தேர்வு செய்துள்ளார். இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. டி20 கிரிக்கெட் தொடரில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இளம் வீரர்களைக் கொண்ட அணி இலங்கையை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி தொடரை வென்றது.

இந்திய அணியில் அக்சர் படேல், சூர்ய குமார் யாதவ், ஷிவம் மாவி, ராகுல் திரிபாதி, உம்ரான் மாலிக் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை இந்த தொடரில் வெளிப்படுத்தினர். கேப்டனாக தனது முதல் அசைன்மென்ட்டை முடித்த உற்சாகத்தில் ஹர்திக் பாண்ட்யா உள்ளார். அவரை டி20 அணிக்கான நிரந்தர கேப்டனாக நியமிக்க வேண்டும் என முன்னாள் வீரர்கள் வலியுறுத்த தொடங்கியுள்ளனர்.

நாளை இந்தியா – இலங்கை முதல் ஒருநாள் போட்டி கவுகாத்தியில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் ரோகித் சர்மா, விராட் கோலி, கே.எல். ராகுல் உள்ளிட்ட வீரர்கள் பங்கேற்கின்றனர். வங்கதேச தொடரில் இந்திய அணியில் இடம்பெற்ற இஷான் கிஷன் இரட்டை சதத்தை எளிதாக அடித்து கவனம் ஈர்த்தார்.

அவர் நாளை நடைபெறவுள்ள ஆட்டத்தில் விளையாடுவாரா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. மூத்த வீரர்கள் அணியில் இடம்பெறுவதால், ஆடும் லெவனை எப்படி கேப்டன் ரோகித் சர்மா தேர்வு செய்யப் போகிறார் என்பதை அறிய ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

இஷான் கிஷன் இரட்டை சதம் அடித்திருந்தாலும் ரோகித் சர்மாவுடன் இணைந்து சுப்மன் கில் தொடக்க வீரராக விளையாடினால் இந்திய அணிக்கு அதிக பலன்கள் கிடைக்கும் என்று முன்னாள் வீரர் இர்பான் பதான் கூறியுள்ளார்.

டி20 தொடரில் சுப்மன் கில் சரியாக விளையாடாவிட்டாலும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அவர் அற்புதமாக விளையாடக் கூடியவர் என்று இர்பான் பாராட்டு தெரிவித்துள்ளார்.

‘இந்திய அணியின் தேர்வுக்குழுவில் மருத்துவ வல்லுனர்கள் இடம்பெற வேண்டும்’ – கவாஸ்கர் வலியுறுத்தல்

ஆடும் லெவனில் இஷான் கிஷனும் இடம்பெற வேண்டும் என்றும் இர்பான் பதான் தனது விருப்பத்தை கூறியுள்ளார்.

காயத்திலிருந்து மீண்டாலும் இலங்கை தொடரிலிருந்து பும்ரா நீக்கம்… காரணம் இதுதானாம்…

உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடருக்காக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தற்போதே ஆயத்தமாகி வருகிறது. இதற்காக 20 வீரர்களைக் கொண்ட பட்டியலை பிசிசிஐ உருவாக்கியுள்ளது.

First published:

Tags: Cricket