ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

பவுன்சர் பந்துவீச்சை இப்படியா அடிப்பார்கள்: இர்ஃபான் பதானின் WTC Final விமர்சனம்

பவுன்சர் பந்துவீச்சை இப்படியா அடிப்பார்கள்: இர்ஃபான் பதானின் WTC Final விமர்சனம்

இந்திய அணி வீரர்கள்

இந்திய அணி வீரர்கள்

Follow the Blues என்ற விளையாட்டு தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்ற இர்ஃபான் பதான், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணியின் செயல்பாடுகள் குறித்து பேசியிருக்கிறார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் கடந்த 2019 ஆகஸ்ட் தொடங்கி ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த மாதம் முடிவுக்கு வந்தது. இதில் இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி சாம்பியன் பட்டம் வென்றது.

இந்த தொடரில் இந்திய பேட்ஸ்பேன்கள் இன்னும் கொஞ்சம் பொறுப்புடன் விளையாடியிருக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் கூறியுள்ளார்.

இறுதிப் போட்டியின் ரிசர்வ் தினத்தில் இந்தியா ஒன்றரை செஷன்களுக்குள் 8 விக்கெட்டுகளை இழந்தது மற்றும் 2வது இன்னிங்ஸில் இந்திய அணி 170 ரன்களுக்கு ஆட்டமிழந்தது, இது நியூசிலாந்திற்கு மீதமுள்ள 53 ஓவர்களில் 139 ரன்கள் மட்டுமே தேவை என்பதால் சமனின் முடியவேண்டிய மெட்ச், கையை விட்டு நழுவியது.

Follow the Blues என்ற விளையாட்டு தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்ற இர்ஃபான் பதான், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணியின் செயல்பாடுகள் குறித்து பேசியிருக்கிறார்.

Also Read:  உலக கோப்பையையே தவறவிட்டதை போல உணர்ந்தேன் - டிம் சவுத்தியை கலங்க வைத்த இந்திய வீரர்!

பவுன்சர் பந்துகளை சந்தித்த இந்திய பேட்ஸ்மேன்கள், தங்கள் உடலை பயன்படுத்துவதை தவிர்த்து அதிகளவில் புல் ஷாட்டுகளாக அடித்தனர், இது அவர்களிடையே அர்ப்பணிப்பு இல்லாததை காட்டுகிறது. இந்த கேள்விகள் அவர்களுக்கு கடினமாக இருக்கலாம் ஆனால் எதிர்காலத்தில் தைரியத்தோடு இந்த கேள்விகளுக்கு பதில் அளிப்பார்கள் என நம்புகிறேன்.

நியூசிலாந்து பேட்ஸ்மேன்களால் 2 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்களை திரட்ட முடிகிறது, ஆனால் அதே ஸ்கோரை எட்டுவதற்கு நம் இந்திய அணி 8 விக்கெட்களை பறிகொடுத்தது. முதல் இன்னிங்ஸ் பேட்டிங் நன்றாக இருந்தது, ஆனால் இரண்டாவது இன்னிங்ஸின் பேட்டிங் ஏமாற்றம் தரும் வகையில் இருந்தது.

Also Read:   உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வெற்றிக்குபிறகு கோலியின் நெஞ்சில் சாய்ந்தது ஏன்? - கனே வில்லியம்சனின் சுவாரஸ்ய பதில்

2வது இன்னிங்ஸில் ரிஷப் பந்த் அதிகபட்சமாக 41 ரன்கள் எடுத்தார். ஆனால் அவர் தொடர்ந்து வேகப்பந்து வீச்சாளர்களை அட்டாக் செய்த விதம் அவ்வளவு நன்றாக இல்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ரிஷாப் பந்த் சிறந்த பேட்ஸ்மேனாக இருப்பதையும், அவர் எப்படி பந்துகளை நன்றாக அடிக்க முடியும் என்பதையும் நான் அறிவேன், ஆனால் அதற்காக நீங்கள் ஒரு வேகப்பந்து வீச்சாளரின் பந்துவீச்சை நொறுக்க வேண்டும் என்று அர்த்தமல்ல, கொஞ்சம் பொறுப்புணர்வு தேவை” இவ்வாறு இர்ஃபான் பதான் தெரிவித்தார்.

Published by:Arun
First published:

Tags: ICC World Test Championship, Irfan Pathan, Virat Kohli