• HOME
 • »
 • NEWS
 • »
 • sports
 • »
 • இதை விட அஸ்வினை ஒருவர் நினைவில் வைத்துக் கொள்ள முடியுமா?- ஒழிப்பு குறித்து இர்பான் பதான் கோலிக்கு மெசேஜ்

இதை விட அஸ்வினை ஒருவர் நினைவில் வைத்துக் கொள்ள முடியுமா?- ஒழிப்பு குறித்து இர்பான் பதான் கோலிக்கு மெசேஜ்

இர்பான் பதான்

இர்பான் பதான்

ஒருவரை அணியில் தேர்வு செய்து அவர் பயங்கரமாக ஆடி அதனால் அவர் புகழடைவதை விட அணியில் தேர்வு செய்யப்படாமல் அநியாயமாக ஒழிக்கப்படுவதன் மூலம் நினைவில் வைத்துக் கொள்ளப்படுவதன் கொடுமையை நகைச்சுவையாக முன்னாள் ஆல்ரவுண்டர் இர்பான் பதான் வெளிப்படுத்தியுள்ளார்.

 • Share this:
  உலகத் தரம் வாய்ந்த இந்திய ஆப் ஸ்பின்னர் அஸ்வினை ஓரங்கட்டுவது குறித்து பலரும் கருத்துக்கள் கூறிவருகின்றனர். விமர்சித்து வருகின்றனர். தொடர்ந்து தண்ட ஜடேஜாவை தேர்வு செய்து வருகிறார், இன்று அவர் விக்கெட்டுகளை வீழ்த்தி விட்டால் கோலி ‘பாத்தியா நான் சரிதான்’ என்று கூறுவார். ஆனால் நம்மில் பலருக்கும் கூட 10 டெஸ்ட் வாய்ப்பு கொடுத்தால் நாமும் ஏதோ ஒரு இன்னிங்ஸ் நன்றாகவே ஆடுவோம். எனவே வாய்ப்பு தரப்பட வேண்டும் என்பதுதான் முக்கியமே தவிர இந்த மேட்சில் ஜடேஜா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றிவிட்டால் உடனே என் செலக்‌ஷனை பார்த்தாயா என்று மார்தட்டுவதில் எந்தப் பயனும் இல்லை.

  இன்றைய தேதியில் எவ்வளவு மேட்ச்கள் வேண்டுமானாலும் கோலி சொதப்பலாம், அது பற்றி கேள்வி எழாது, ஆனால் சூரியகுமார் யாதவோ, பிரிதிவி ஷாவோ ஒரு மேட்சில் சொதப்பினாலும் உடனே நம் வரலாறு அறியா நெட்டிசன்கள் புகுந்து அவர்களைக் காலி செய்து விடுவார்கள்.

  கோலி போல் 2 ஆண்டுகள் சொதப்பும் வாய்ப்பு கூட பிரிதிவி ஷாவுக்கோ, கேதார் ஜாதவுக்கோ கிடைக்காது, என்பதை அறியாதவர்கள் தான் நவீன கால கிரிக்கெட் ரசிகர்கள். ஆனால் அஸ்வினை உட்கார வைப்பதற்கான காரணங்கள் கிரிக்கெட்டுக்கு அப்பாற்பட்டது என்பதை யார் அறிவார்கள்? கோலி கிரிக்கெட் காரணங்களைக் கூறுவார், ஆனால் உண்மையான காரணம் கிரிக்கெட்டுக்கு அப்பாற்பட்ட காரணங்கள் என்றுதான் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

  இந்நிலையில் ‘கோலியுகம்’, கோலி யோகம் பற்றி நேரடியாக எதுவும் கூறாமல் இர்பான் பதான் மிகவும் சூட்சுமமாக ஒரு நையாண்டியை கட்டவிழ்த்து விட்டுள்ளார்.

  அஸ்வின் நீக்கம் பற்றி அவர் தன் சமூக வலைத்தளத்தில் ஹிந்தி மொழியில் பதிவிட்டிருப்பதன் அர்த்தம் இதுதான்: ‘இந்தத் தொடரில் அஸ்வினை பலரும் நினைவில் வைத்திருக்கும் அளவுக்கு எந்த ஒருவருக்கும் அவர்களது வாழ்நாள் முழுதுமே சாத்தியமாகாது’ என்று மிகவும் நயநாகரீகமாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதாவது தேர்வு செய்து சாதனைகள் மூலம் ஒரு வீரர் மாவீரனாவதைக் காட்டிலும் அணியில் தேர்வு செய்யப்படாமலே அஸ்வின் நினைவுகூரப்படுவது யாருக்கும் வாய்க்காத அரிதான துரதிர்ஷ்டம் என்பதே இர்பான் பதானின் மெசேஜ்.

  இர்பான் பதான்


  முன்னாள் வீரர் விவிஎஸ் லஷ்மணும் கோலியுகம் கோலியோகத்தைப் பற்றி கூறும்போது, “ஆம். நான் அஸ்வின் விளையாடுவார் என்றுதான் நினைத்தேன், ஆனால் விலக்கப்பட்டது குறித்து ஆச்சரியமடைந்தேன். இந்த ஓவல் பிட்ச் போட்டி முடிவை நெருங்கும் போது ஸ்பின்னர்களுக்கு சாதகமாகவே இருக்கும். அஸ்வின் உலகத்தரம் வாய்ந்த பவுலர் எதிரணியினர் மீது அழுத்தத்தை அதிகரிக்கும் திறமை அவரது பலம்” என்றார்.

  இங்கிலாந்து 77/0. இந்திய வெற்றி, இங்கிலாந்து வெற்றி, ட்ரா ஆகிய 3 முடிவுகளுமே இன்னும் சாத்தியமே. ஜடேஜா வெற்றி பெறுகிறாரா இல்லையா என்பது வேறு பிரச்னை, அஸ்வினை ஒரு போட்டியில் கூட எடுக்காதது வேறு பிரச்னை என்பதாகத்தான் பார்க்க வேண்டும், அதே போல் இந்தியா வெற்றி பெற்றால் அது அஸ்வின் நீக்கத்தை நியாயப்படுத்தி விடாது, மாறாக இந்த டெஸ்ட் ட்ரா ஆனாலுமே அஸ்வின் இல்லாததை பேசியாக வேண்டி வரும்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Muthukumar
  First published: