ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

‘என் நாடு, என் அழகான நாடு மிகப்பெரிய நாடாகும் சக்தி கொண்டது ஆனால்...’.- இர்பான் பதான் ட்வீட்டை பூர்த்தி செய்த அமித் மிஸ்ரா

‘என் நாடு, என் அழகான நாடு மிகப்பெரிய நாடாகும் சக்தி கொண்டது ஆனால்...’.- இர்பான் பதான் ட்வீட்டை பூர்த்தி செய்த அமித் மிஸ்ரா

இர்பான் பதான் - கோப்புப் படம்.

இர்பான் பதான் - கோப்புப் படம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

முப்பத்தொன்பது வயதான இந்திய லெக் ஸ்பின்னர் அமித் மிஸ்ரா வெள்ளிக்கிழமை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் சமூக ஊடகத்தில் இந்தியாவைப் பற்றி முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் செய்த ட்வீட்டில் ‘ஆனால்..’என்று விடுபட்டிருந்த தொடரை முடிக்கும் விதமாக பூர்த்தி செய்துள்ளார்.

நாட்டில் தற்போது நடந்து வரும் சில அரசியல்-சமூக- கலாச்சார விஷயங்கள் பிரபலஸ்தர்களையும் கவலை கொள்ளச் செய்து அவர்கள் தங்கள் கருத்துக்களை சூசகமாகவும் பூடகமாகவும் தெரிவித்து வருகின்றனர், கிரிக்கெட் வீரர்களும் இதற்கு விதிவிலக்கல்ல.

இந்நிலையில் இர்பான் பதான், தன் சமூக ஊடகப் பக்கத்தில், “என் நாடு, என் அழகான நாடு, இந்த பூமியில் மிகப்பெரிய நாடாக இருக்கக் கூடிய சக்தி வாய்ந்தது ஆனால்.” என்று பதிவிட்டிருந்தார்.

அந்த ஆனால் என்ற வார்த்தைக்குப் பிறகு இர்பான் பதான் என்ன எண்ணம் வைத்திருந்தார் என்று யாராலும் சொல்ல முடியாது, அதற்கு லெக் ஸ்பின்னர் அமித் மிஸ்ரா பதிலளிக்கும் விதமாக கூறும்போது, “என் நாடு, என் அழகான நாடு, பூமியின் மிகச்சிறந்த நாடாக மாறும் சக்தி கொண்டது. அப்படி மாற வேண்டுமென்றால் சிலர் இந்திய அரசியல் சட்டமே தாங்கள் கடைப்பிடிக்க வேண்டிய முதல் நூல் என்ற வழியில் செல்ல வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

ராம நவமி மற்றும் ஹனுமன் ஜெயந்தி போன்ற பண்டிகை நாட்களில் நடந்த விரும்பத்தகாத சம்பவங்களைக் குறித்ததாக இர்பான் பதான், அமித் மிஸ்ராவின் ட்வீட்கள் இருக்கலாம் என்று கருதப்படுகிறது, நெட்டிசன்கள் அப்படியாகத்தான் அதற்குப் பதில் அளித்து வருகின்றனர்.

First published:

Tags: IPL 2022, Irfan Pathan