அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இர்ஃபான் பதான் அறிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 2003ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அறிமுகமானவர் இர்ஃபான் பதான். இடதுக்கை வேகப்பந்து வீச்சாளரான இவர் 301 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளார்.
இர்பான் பதான் இந்திய அணிக்காக 29 டெஸ்ட், 120 ஒரு நாள் மற்றும் 24 டி20 போட்டிகளில் விளையாடி மொத்தம் 301 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார்.
2006ம் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஹட்ரிக் விக்கெட் எடுத்து அசத்தினார். 2007 டி20 உலக்கோப்பை இறுதிப் போட்டியில் ஆட்டநாயகன் விருதையும் இர்ஃபான் பதான் தட்டி சென்றார் என்பது குறிப்பிடதக்கது.
இந்த நிலையில், எல்லா விதமான கிரிக்கெட் போட்டியிலும் இருந்தும் அவர் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.