ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

இந்திய அணியை கிண்டல் செய்த பாகிஸ்தான் பிரதமர் : பதிலடி கொடுத்த இர்பான் பதான்!

இந்திய அணியை கிண்டல் செய்த பாகிஸ்தான் பிரதமர் : பதிலடி கொடுத்த இர்பான் பதான்!

மாதிரி படம்

மாதிரி படம்

இர்பான் பதானின் இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  டி20 உலகக்கோப்பை தோல்வி குறித்து இந்திய அணியை கிண்டல் செய்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீபுக்கு இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் பதிலடி கொடுத்துள்ளார்.

  டி20 உலககோப்பையில் இரண்டாவது அரையிறுதி போட்டி இந்தியா -இங்கிலாந்து அணிகள் மோதின. அடிலெய்ட்டில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. ஹர்திக் பாண்டியாவின் அதிரடியால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்துள்ளது. ஹர்டிக் பாண்டியா 33 பந்துகளில் 63 ரன்கள் விளாசினார்.

  இதனையடுத்து 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி தொடக்க வீரர்கள் ஜோஸ் பட்லர் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் இந்திய அணியின் பந்துவீச்சை சிதறடித்தனர். இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 16 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. பட்லர் 80 மற்றும் அலக்ஸ் 86 ரன்கள் குவித்தனர். இந்திய அணி ஒரு விக்கெட் கூட எடுக்க முடியாமல் படுதோல்வி அடைந்து வெளியேறியது.

  இதையும் படிங்க: பார்ட்டியில் ஓடியபோது கால்வழுக்கி விபத்து.. மேக்ஸ்வெலுக்கு கால் முறிவு: 3 மாதங்களுக்கு நோ கிரிக்கெட்!

  இந்த நிலையில் இந்திய அணியின் தோல்வியை கிண்டல் செய்யும் வகையில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தனது ட்விட்டர் பதிவில், எனவே, இந்த ஞாயிற்றுக்கிழமை இறுதி போட்டியில் 152/0 vs 170/0" என்று பதிவிட்டிருந்தார். இந்த ஆண்டு இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 170 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது போல், கடந்த 2021 டி-20 உலகக்கோப்பை லீக் சுற்றில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் அணி 152 சேர்த்து விக்கெட் இழப்பின்றி வெற்றி பெற்றது. இதனை குறிப்பிடும் விதமாகவே ஷெபாஸ் ஷெரீப் 152/0 vs 170/0 என்று பதிவிட்டுள்ளார்.

  பாகிஸ்தான் பிரதமருக்கு பதான் பதிலடி

  இந்த நிலையில் பாகிஸ்தான் பிரதமரின் பதிவிற்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் ட்விட்டரில் பதிலடி கொடுத்துள்ளார். அவரது ட்விட்டர் பதிவில் இதுதான் உங்களுக்கும் எங்களுக்கும் உள்ள வித்தியாசம். நாங்கள் எங்களது நிலையில் மகிழ்ச்சியாக இருக்கிறோம். ஆனால் நீங்களோ மற்றவர்கள் கஷ்டத்தில் இருக்கும்போது மகிழ்ச்சியைத் தேடுகிறீர்கள். அதனால்தான் நீங்கள் உங்கள் நாட்டின் நலனில் கவனம் செலுத்துவதில்லை என்று இர்பான் பதான் பதிவிட்டுள்ளார். இர்பான் பதானின் இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: India Vs England, Irfan Pathan, T20 World Cup