பிற நாட்டு பிரபலங்கள் இந்திய விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்தும் இந்திய அரசை விமர்சித்தும் தெரிவித்த சமூக ஊடகக் கருத்துகளுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியது, இந்திய கிரிக்கெட் வீரர்கள் சச்சின், கோலி, ரோஹித், ரஹானே முதல் ரவிசாஸ்திரி, அனில் கும்ப்ளே என்று பலரும் வெளிநாட்டினர் தலையிட வேண்டாம் என்று கண்டித்தனர்.
இவர்கள் இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் இந்தியா டுகெதர், இந்தியா எகெய்ன்ஸ்ட் புரோபகாண்டா என்ற ஹேஷ்டேகுகளை இந்திய முன்னாள், இந்நாள் வீரர்கள் பயன்படுத்தி இது உள்நாட்டு பிரச்சினை வெளிநாட்டினர் தலையிட வேண்டாம் என்று பதிவிட்டனர்.
கங்கனா ரணாவத்தும் இவர்களை எதிர்த்து காரசார ட்வீடகளை வெளியிட்டார்.
பாப் பாடகி ரிஹானா, முன்னாள் போர்ன் நடிகை மியா கலீஃபா, சுற்றுச்சூழல் செயல்பாட்டாளரான இளம் கிரேட்டா தன்பெர்க் ஆகியோர் விவசாயிகள் பக்கம் நிற்பதாக ட்வீட் செய்தது, இந்தியர்களின் ஒரு பகுதியினரிடத்தில் கோபாவேசத்தைக் கிளப்பியது.
கமலா ஹாரிஸின் உறவினர் மீனா ஹாரிசையும் கண்டித்து ஆர்பாட்டம் நடந்தது, இவர்கள் புத்தியோடுதான் பேசுகிறார்களா என்ற ரீதியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ரிஹானா, கிரேட்டா, மியா ஆகியோரை எதிர்த்து கோஷமிட்டனர்.
டிவிட்டர் மற்றும் பிற சமூக ஊடகங்களில் விவசாயப்போராட்டத்தையும் விடவும் இது முக்கியத்துவம் பெறத் தொடங்கி, இவர்களை தாக்கியும், கேலியும் கிண்டலும் செய்தும் பதிவுகள் பறந்தன.
இந்நிலையில் முன்னாள் இந்திய இடது கை வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதான், தன் டிவிட்டர் பக்கத்தில் மிகவும் சூசகமாக, விவசாயப் போராட்டத்தை ஆதரிக்கும் வெளிநாட்டினருக்கு ஆதரவாகவும் கிரிக்கெட் வீரர்களுக்கு பதிலடி கொடுப்பது போலவும் பதிவிட்டுள்ளார்:
“அமெரிக்காவில் கருப்பரினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட் போலீஸால் கொல்லப்பட்ட போது நம் நாடு மிகச்சரியாக துயரத்தை வெளிப்படுத்தியது. #ஜஸ்ட் சேயிங்” என்று ட்வீட் செய்துள்ளார்.
அதாவது அப்போது அது அமெரிக்காவின் உள்நாட்டு விவகாரம் என்று நாம் இல்லாமல் சரியாகவே நம் துயரை, கண்டனத்தை வெளிப்படுத்தினோம் என்பதைத்தான் சூசகமாகக் குறிப்பிட்டு இப்போது அவர்கள் விவசாயப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தால் என்ன என்பது போல் பதிவிட்டுள்ளார் இர்பான் பதான்.
இன்னொரு கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி, யாரோ ஒருவர் கையில் கயிறு இருக்க முன்னாள், இந்நாள் வீரர்கள் பொம்மைகளாக ஆட்டிவைக்கப்படுகின்றனர் என்ற தொனியில், “குழந்தைப் பருவத்தில் பொம்மலாட்டம் பார்த்ததில்லை. ஒரு பொம்மலாட்டத்தைப் பார்க்க என் வாழ்நாளில் எனக்கு 35 ஆண்டுகள் ஆகியுள்ளது” என்று ட்விட் செய்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Captain Virat Kohli, Farmers Protest, Irfan Pathan, Sachin tendulkar