முகப்பு /செய்தி /விளையாட்டு / 360 ரன்களை விரட்டி 1 ரன்னில் தோல்வி கண்ட அயர்லாந்து! நியூசிலாந்தை கதறவிட்ட பால் ஸ்டர்லிங், டெக்டர் சதங்கள்

360 ரன்களை விரட்டி 1 ரன்னில் தோல்வி கண்ட அயர்லாந்து! நியூசிலாந்தை கதறவிட்ட பால் ஸ்டர்லிங், டெக்டர் சதங்கள்

1 ரன்னில் தோல்வி அடைந்த விரக்தியில் அயர்லாந்து வீரர்கள்

1 ரன்னில் தோல்வி அடைந்த விரக்தியில் அயர்லாந்து வீரர்கள்

அயர்லாந்தின் டப்லின் நகரில் மலஹைடில் நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியில் மிகப்பெரிய விரட்டலைச் கிட்டத்தட்ட சாதித்து சாதனை படைத்திருக்க வேண்டிய அயர்லாந்து, பரிதாபமாக 360 ரன்கள் இலக்குக்கு வெகு அருகில் வந்து 1 ரன்னில் தோல்வி அடைந்ததில் நியூசிலாந்து 3-0 என்று ஒயிட் வாஷ் வெற்றி பெற்றது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :

அயர்லாந்தின் டப்லின் நகரில் மலஹைடில் நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியில் மிகப்பெரிய விரட்டலைச் கிட்டத்தட்ட சாதித்து சாதனை படைத்திருக்க வேண்டிய அயர்லாந்து, பரிதாபமாக 360 ரன்கள் இலக்குக்கு வெகு அருகில் வந்து 1 ரன்னில் தோல்வி அடைந்ததில் நியூசிலாந்து 3-0 என்று ஒயிட் வாஷ் வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லேதம் முதலில் பேட் செய்ய, மார்ட்டின் கப்தில் 126 பந்துகளில்ல் 15 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 115 ரன்கள் விளாச, ஹென்றி நிகோல்ஸ் 54  பந்துகளில் 79 விளாசினார், கிளென் பிலிப்ஸ் 30 பந்தில்  47 மற்றும் கடைசியில் பிரேஸ்வெல் 21, சாண்ட்னர் 14 என்று பினிஷிங் டச் கொடுக்க நியூசிலாந்து 50 ஒவர்களில் 360/6 என்ற ஸ்கோரை எட்டியது. தொடர்ந்து ஆடிய அயர்லாந்து அணியில் தொடக்க வீரர் பால் ஸ்டர்லிங் 14 பவுண்டரி 5 சிக்சர்களுடன் 103 பந்துகளில் 120 ரன்களையும் வளரும் நட்சத்திர வீரர் ஹென்றி டெக்டர் 106 பந்துகளில் 7 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் 108 ரன்களை எடுக்க 359/9 என்று மிக அருகில் வந்து வலிநிறைந்த தோல்வி கண்டதோடு 3-0 என்று ஒயிட் வாஷ் வாங்கியதும் அயர்லாந்தின் இருதயத்தை நொறுங்கச் செய்தது.

சத நாயகன் ஹாரி டெக்டர் ஆட்டமிழந்த போது அயர்லாந்து 310 ரன்களுக்கு 6 விக்கெட் என்று இருந்தது. காரெத் டெலானி 22, லோர்கன் டக்கர் 14, ஜார்ஜ் டாக்ரெல் 22 என்று இலக்குக்கு அருகில் கொண்டு செல்ல, கிரஹாம் ஹியூம் 7, ஜோஷ் லிட்டில் 1 என்று கடைசி ஓவரில் 10 ரன்கள் அடிக்க வேண்டிய இடத்தில் நியூசிலாந்து பவுலர் டிக்னர் நன்றாக வீசி 8 ரன்களையே கொடுத்தார். ஒரு ரன்னில் உண்மையில் தோல்வி என்பது வெற்றிக்குச் சமமே.

Ireland's Paul Stirling fired a century, but New Zealand came out on top in Dublin
அயர்லாந்தின் பால் ஸ்டர்லிங் சதம்

மார்டின் கப்டில் அயர்லாந்தின் பந்து வீச்சை அடித்து நொறுக்கி தனது 18வது ஒருநாள் சதத்தை எடுத்தார். ஹென்றி நிகோல்ஸ் பொதுவாக மட்டை போடுபவர் நேற்று 3 சிக்சர்களை விளாசி 54 பந்தில்ல் 79 ரன்கள் விளாசினார்.

361 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து  பால்பர்னி விக்கெட்டை 7 ரன்களில் இழந்தது. பால் ஸ்டர்லிங், மெக்பிரைன் இணைந்து 55 ரன்களைச் சேர்த்து ஸ்கோரை 62க்குக் கொண்டு சென்றனர். அப்போது மெக்பிரைன் ஹென்றியிடம் அவுட் ஆனார். 10வது ஓவரில் 62/2 என்று இருந்த அயர்லாந்துக்கு பால் ஸ்டர்லிங் இளம் வளரும் நட்சத்திர பேட்டர் ஹாரி டெக்டர் இணைந்து சாதனை  சதக் கூட்டணி அமைத்து ஓவருக்கு 7 ரன்கள் என்ற வீதத்தில் 179 ரன்களை சேர்த்து இருவருமே சதம் கண்டனர்.

பால் ஸ்டர்லிங் தேர்ட்மேனில் தட்டி விட்டு பவுண்டரி விளாசி சதம் கண்டார், ஆனால் ஸ்கோர் 241 ஆக இருக்கும் போது இவரது ஸ்கோர் 120 ஆக இருக்கும் போது  மேட் ஹென்றியிடம் ஆட்டமிழந்து கோபத்துடன் வெளியேறினார். அதன் பிறகு டெக்டர் நியூசிலாந்து பவுலிங்கை கதற விட்டார்.  5 சிக்சர்களுடன் அவர் 108 ரன்கள் எடுத்து இந்தத் தொடரின் 2வது சதத்தை எடுத்தார். 310 ரன்களில் இவர் ஆட்டமிழந்த போது அயர்லாந்து வெற்றி வாய்ப்பு சற்றே மங்கியது.

Harry Tector also piled in a hundred runs, but it was not enough after a dramatic ending
அயர்லாந்தின் வளரும் நட்சத்திரம் ஹாரி டெக்டர் சதமெடுக்கும் போது ஷாட் ஆடும் காட்சி.

ஆனால் டாக்ரெல் 22 ரன்களை விளாசி இலக்குக்கு அருகில் நகர்த்தினார். கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவை ஆனால் நியூசிலாந்து பவுலர் பிளைர் டிக்னர் பதற்றமில்லாமல் வீசினார் அயர்லாந்து 8 ரன்களை எடுத்தது. 359 என்று வலி நிறைந்த தோல்வி கண்டது.

மேட் ஹென்றி 4 விக்கெட், சாண்ட்னர் 3 விக்கெட்.

ஆட்ட நாயகன் மார்டின் கப்டில், தொடர் நாயகன் பிரேஸ்வெல், தொடர் நாயகன் விருதையாவது டெக்டருக்குக் கொடுத்திருக்கலாம். இந்தியாவுக்கு எதிராக டி20-யில் 224 ரன்கள் இலக்கை எதிர்த்து 220 வரை வந்தனர், அன்று நியூசிலாந்துக்கு அதிர்ச்சியளிக்கும் தறுவாயில் பிரேஸ்வெல் சதமெடுத்து கடைசி ஓவரில் 24 ரன்களை விளாசி வென்றார். நேற்று ஒரு ரன்னில் தோல்வி, என்று அயர்லாந்துக்கு தொடர்ந்து நெருக்கமான போட்டியாக அமைந்து தோல்வி அடைந்து வருகிறது.

First published:

Tags: Ireland, New Zealand, ODI