Home /News /sports /

IRE vs AFG- ரஷீத் கான் பாச்சா பலிக்கவில்லை- 2வது டி20-யிலும் ஆப்கானை ஊதிய அயர்லாந்து

IRE vs AFG- ரஷீத் கான் பாச்சா பலிக்கவில்லை- 2வது டி20-யிலும் ஆப்கானை ஊதிய அயர்லாந்து

2வது டி20 - அயர்லாந்து வெற்றி

2வது டி20 - அயர்லாந்து வெற்றி

பெல்பாஸ்ட்டில் நேற்று நடைபெற்ற 2வது டி20 சர்வதேச போட்டியிலும் ஆப்கானிஸ்தான் அணியை அயர்லாந்து அணி பந்தாடி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-0 என்று முன்னிலை வகிக்கிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    பெல்பாஸ்ட்டில் நேற்று நடைபெற்ற 2வது டி20 சர்வதேச போட்டியிலும் ஆப்கானிஸ்தான் அணியை அயர்லாந்து அணி பந்தாடி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-0 என்று முன்னிலை வகிக்கிறது.

    முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணியை 122 ரன்களுக்கு மட்டுப்படுத்திய அயர்லாந்து பிறகு 125/5 என்று 19 ஓவர்களில் வெற்றி பெற்று தொடரில் 2-0 என்று முன்னிலை பெற்றுள்ளது.

    2வது முறையாக ஆப்கானிஸ்தான் கேப்டன் முகமது நபி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து சொதப்பினார். 3வது ஓவரிலேயே ஆப்கன் தொடக்க வீரர்கள் ரஹ்மத்துல்லா குர்பாஸ் (1), உஸ்மான் கனி (1) இருவரும் 3வது ஓவருக்குள் பெவிலியன் திரும்பினர். 10 ஓவர்கள் முடிவில் 62/4 என்று ஆப்கான் திணறிக்கொண்டிருந்தது. இரண்டாவது 10 ஓவர்களும் சரியாக அமையாமல் ஆப்கானிஸ்தான் 122/8 என்று முடிந்தது. வைடு 7, லெக்பை 11, நோ-பால் 2 என்று உதிரிகள் வகையில் 19 ரன்கள் இரண்டாவது அதிகபட்ச பங்களிப்பு. ஹஸ்மத்துல்லா ஷாஹிதி 36 ரன்களை 42 பந்துகளில் எடுத்ததே அதிகபட்ச ஆப்கன் தனிப்பட்ட ஸ்கோராகும்.

    அயர்லாந்து தரப்பில் ஜோஷ் லிட்டில், மார்க் ஆதிர், கர்ட்டிஸ் கேம்பர், காரெத் டெலானி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

    122 ரன்களை அயர்லாந்துக்கு எதிராக தடுப்பதெல்லாம் மிக மிகக் கடினம். பால்பர்னி 36 பந்துகளில் 4 பவுண்டரி 1 சிக்சருடன் 46 ரன்கள் எடுத்து வெற்றியை உறுதி செய்தார். பின்னால் கொஞ்சம் விக்கெட்டுகள் சடுதியில் விழுந்தாலும் ஆப்கானிஸ்தானின் மோசமான பீல்டிங்கை வைத்துக் கொண்டு 122 ரன்களையெல்லாம் தடுக்க முடியாது.

    ரஷீத் கான் 4 ஓவர் 27 ரன் விக்கெட் இல்லாமல் முடிந்தார். லோர்கான் டக்கர் 27, டாக்ரெல் 25 நாட் அவுட் எளிதாக அயர்லாந்து 125/5 என்று வெற்றி பெற்றது. முகமது நம்பி 2 ஓவர் 15 ரன் 2 விக்கெட். ஆட்டநாயகனாக அயர்லாந்தின் ஜோஷ் லிட்டில் தேர்வு செய்யப்பட்டார்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Afghanistan, Cricket, Ireland, T20

    அடுத்த செய்தி