அயர்லாந்தை தீர்த்துக்கட்ட இரண்டே பேர்தான்... இங்கிலாந்தின் சக்ஸஸ் பிளான்...

15.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது அயர்லாந்து. வோக்ஸ் 6 விக்கெட்களும், பிராடு 4 விக்கெட்களும் எடுத்து அசத்தினர்.

Web Desk | news18
Updated: July 26, 2019, 11:22 PM IST
அயர்லாந்தை தீர்த்துக்கட்ட இரண்டே பேர்தான்... இங்கிலாந்தின் சக்ஸஸ் பிளான்...
அயர்லாந்தை சுருட்டிய இங்கிலாந்து
Web Desk | news18
Updated: July 26, 2019, 11:22 PM IST
அயர்லாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெறும் 38 ரன்களுக்குள் சுருட்டி  அபார வெற்றியை பதிவு செய்தது.

அயர்லாந்து அணிக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி பங்கேற்றது. இப்போட்டி புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் போட்டி நடைபெற்றது.

முதல் இன்னிங்க்ஸில் உலக சாம்பியனான இங்கிலாந்து அணியை 85 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆக்கி அனைவரையும்  அதிர்ச்சிக்கு உட்படுத்தியது அயர்லாந்து.


பின்னர், ஆடிய அயர்லாந்து அணி 207 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. இதை தொடர்ந்து, இங்கிலாந்து அணி 2-ம் இன்னிங்க்ஸில் 303 ரன்கள் எடுத்தது. பின்னர் வெற்றிக்கு 182 ரன்கள் தேவை என்ற நிலையில் 2-ம் இன்னிங்க்ஸ்-ஐ துவக்கியது அயர்லாந்து.

வெற்றிக் கனவுகளோடு பேட்டிங் செய்ய வந்த அயர்லாந்து அணியின் பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை வேட்டையாட தொடங்கினர் இங்கிலாந்து அணியின் ஸ்டூவர்ட் பிராடு, கிறிஸ் வோக்ஸ்.

வோக்ஸ் வீசிய 4-வது ஓவரில் போர்ட்டர்பீல்டு 2 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர்களது வேட்டையில் அயர்லாந்து அணியின் முக்கிய பேட்ஸ்மேன்கள் ஓரிலக்க ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சிக்குள்ளாக்கினர்.

Loading...

அதன் பின் அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்தது அயர்லாந்து அணி.

15.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, வெறும் 38  ரன்கள் மட்டுமே எடுத்தது அயர்லாந்து.

வோக்ஸ் 6 விக்கெட்களும், பிராடு 4 விக்கெட்களும் எடுத்து அசத்தினர். அயர்லாந்து அணியில் அதிக பட்சமாக மெக்கோலம் 11 ரன்கள் எடுத்தார்.  2-ம் இன்னிங்க்ஸில் அயர்லாந்து அணியில் இரட்டை இலக்க தொட்டவர் அவர் மட்டுமே. மற்ற பேட்ஸ்மேன்கள் சிலர் ஒரிலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.  நான்கு வீரர்கள் டக் அவுட் ஆனார்கள்.

வெறும் 182 ரன்கள் வெற்றி இலக்கை நோக்கி  பயணித்த அயர்லாந்து 38 ரன்களில் வீழ்ந்தது.

இங்கிலாந்தின் இந்த வெற்றிக்கு வேகப்பந்து விச்சாளர்களான ஸ்டூவர்ட் பிராடு, கிறிஸ் வோக்ஸ் மட்டுமே காரணம்..

Also watch: 10 நாட்களில் கோடி ரூபாயை சுருட்டிய கும்பல்... தொடரும் சதுரங்க வேட்டை..

First published: July 26, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...