Home /News /sports /

எல்லோரும் சச்சின் ஆகி விட முடியாது- கோலி பேட்டிங் பிரச்சனைக்குத் தீர்வு சொல்லும் சேவாக்கின் பயிற்சியாளர்

எல்லோரும் சச்சின் ஆகி விட முடியாது- கோலி பேட்டிங் பிரச்சனைக்குத் தீர்வு சொல்லும் சேவாக்கின் பயிற்சியாளர்

கோலி

கோலி

கிரிக்கெட்டின் ஆகச்சிறந்த பேட்டர்களில் ஒருவர் விராட் கோலி. ஆனால் இப்போது அவர் ஆடும் விதம் அவரது பழைய சாதனைகளையே கேள்விக்குறியாக்கி விட்டது, ஒருவேளை ஹைப் பிளேயரோ என்ற சந்தேகம் பலருக்கும் ஏற்படுவது நியாயமே. இரண்டு கோல்டன் டக்குகளுக்குப் பிறகு நேற்று இறங்கி 9 ரன் எடுத்தார், அதிலேயே ஏகப்பட்ட முறை அவுட் ஆகியிருக்க வேண்டும், ஒரே இன்சைடு எட்ஜ்கள். பிரசித் கிருஷ்ணா வேறு அவரை சொல்லி வைத்து வீழ்த்தினார். இந்நிலையில் சேவாக்கின் பயிற்சியாளர் ஏ.என்.சர்மா விராட் கோலியின் பேட்டிங்கில் உள்ள உத்தி ரீதியான கோளாறுகளை அலசுகிறார்.

மேலும் படிக்கவும் ...
  கிரிக்கெட்டின் ஆகச்சிறந்த பேட்டர்களில் ஒருவர் விராட் கோலி. ஆனால் இப்போது அவர் ஆடும் விதம் அவரது பழைய சாதனைகளையே கேள்விக்குறியாக்கி விட்டது, ஒருவேளை ஹைப் பிளேயரோ என்ற சந்தேகம் பலருக்கும் ஏற்படுவது நியாயமே. இரண்டு கோல்டன் டக்குகளுக்குப் பிறகு நேற்று இறங்கி 9 ரன் எடுத்தார், அதிலேயே ஏகப்பட்ட முறை அவுட் ஆகியிருக்க வேண்டும், ஒரே இன்சைடு எட்ஜ்கள். பிரசித் கிருஷ்ணா வேறு அவரை சொல்லி வைத்து வீழ்த்தினார். இந்நிலையில் சேவாக்கின் பயிற்சியாளர் ஏ.என்.சர்மா விராட் கோலியின் பேட்டிங்கில் உள்ள உத்தி ரீதியான கோளாறுகளை அலசுகிறார்.

  இப்போது யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் அவரை வீழ்த்த முடியும் என்ற நிலைக்குத் தாழ்ந்து விட்டார் கோலி. அன்று துஷ்மந்த சமீரா ஒரு பந்தை குத்தி ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே எழுப்பி கொண்டு சென்றார் அதைப் போய் ஆக்ரோஷமாக தள்ளினார். நேராக பேக்வர்ட் பாயிண்டுக்குக் கேட்சாகச் சென்று விட்டது.  அடுத்த போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிராக கோலி இறங்கியதுமே கேன் வில்லியம்சன் ஸ்மார்ட்டாக 2வது ஸ்லிப்பைக் கொண்டு வந்தார். மார்க்கோ யான்சென் ஒரு நேர் ஆஃப் வாலி பந்தை வீசினார், அதைப்போய் தளர்வாக இடித்தார், 2வது ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து விட்டு பிட்சை உற்றுப் பார்த்து விட்டுப் போனார். கொல்கத்தாவின் உமேஷ் யாதவ் இவரை நிறுத்தி வைத்து அவுட் ஆக்கினார். சிஎஸ்கேவுக்கு எதிராக ஸ்கொயர்லெக்கில் நேராக கேட்ச் கொடுத்தார். மும்பை இண்டியன்ஸ் அணிக்கு எதிராக 48 அடித்ததால் இப்போது 128 ரன்களில் உள்ளார் கோலி.

  சரி! கோலியிடம் என்னதான் பிரச்சனை? சேவாக் கோச் கூறுவதென்ன?

  1. கிராஸ் பேட்: ஆஃப் ஸ்டம்பில் அல்லது வெளியே செல்லும் பந்துக்கு கிராஸ் பேட்டில் ஆடுகிறார் விராட் கோலி. இப்படி ஆடினால் ட்ரைவ் ஆடும்போது நிச்சயம் எட்ஜ் ஆகும்.

  2வது ஒன் சைடட் ஷாட்: விராட் கோலியிடம் சமீபமாக எழுந்துள்ள மிகப்பெரிய பிரச்சனை ஒன் சைடட் ஷாட் ஆகும்

  3வது, வலது கீழ் கையை நன்றாக அழுத்தி ஆடுகிறார், இதை பாட்டம் ஹேண்ட் பிளேயர் என்று அழைப்பார்கள். ஷாட் ஆடுவதற்காக அவர் இந்த பாட்டம் ஹேண்ட் முறையைக் கையாள்கிறார், ஆனால் அதுதான் அவர் எட்ஜ் ஆவதற்கும் பிளிக் ஷாட்டில் ஸ்கொயர் லெக்கிலும் லெக் திசையில் விக்கெட் கீப்பர் பின்னால் அவுட் ஆவதற்கும், இன்சைடு எட்ஜ் எடுப்பதற்கும் பிரதான காரணம் என்கிறார் சேவாக் கோச் ஷர்மா.

  விக்கெட்டை தூக்கி எறிந்த கோலி, ஆட்டத்தை தூக்கி எறிந்த ஆர்சிபி


  பவுலர்கள் இவரது இந்த பலவீனத்தை தொழில்நுட்பத்தின் உதவி கொண்டு சுலபமாக மடக்கி விடுகின்றனர். கோச் ஏ.என். ஷர்மா கூறுகையில், “முதலில் பவுலர் என்னிடம் வரும்போது நான் கூறுவதெல்லாம், முதலில் பேட்ஸ்மெனிடம் என்ன குறை இருக்கிறது என்பதைப் பார்க்கச் சொல்வேன்.பேட்டரின் பலவீனத்தை சூட்சமாகப் புரிந்து கொண்டால் அவ்வளவுதான். இப்போதெல்லாம் வீடியோ ஆய்வாளர்களை வைத்து பேட்டரின் பலவீனங்களை அக்குவேறு ஆணி வேறாக பிரித்து போட்டு விடுகின்றனர்” என்கிறார்.

  ஆட்டத்தில் ஈகோவுக்கு இடமில்லை, கோலியின் பிரச்சனை ஈகோவாக எனக்குத் தெரியவில்லை. ஆம்! முதல் பந்திலேயே ஒரே ஷாட்டில் அவுட் ஆவது சிக்கல்தான். ஆஃப்ஸ்டம்ப்புக்கு வெளியே போகும் பந்தை அவர் கொஞ்ச நாள் ஆடக்கூடாது, அல்லது தொடக்கத்தில் இறங்கக் கூடாது. எல்லோரும் சச்சின் ஆகிவிட முடியாது, சச்சின் அவ்வப்போது தன்னுடைய உத்தியை மேம்படுத்திக் கொள்வார். கோலியும் மேம்படுத்த வேண்டும்.

  கோலி எப்படி பார்முக்கு வருவார்?

  “முதலில் அவர் தன் ரெக்கார்டுகளை மறக்க வேண்டும், முதலிலிருந்து தொடங்க வேண்டும். நான் விரேந்திர சேவாகிடமும் இதைத்தான் கூறுவேன், புதிதாக ஒவ்வொரு நாளும் பிறக்க வேண்டும், நடந்தது நடந்தவைதான். சேவாக் இதனால் ரன்களையும் பின்னால் எடுக்க முடிந்தது, அதையே தான் கோலிக்கும் கூறுவேன். முதலில் கிராஸ் பேட்டில் ஆடுகிறார் அதை விட வேண்டும். கீழ் கையை அழுத்தாமல் அதாவது வலது கையை அழுத்தாமல் இடது கையை நன்றாக பயன்படுத்தி ஆடினால் எதிரணியினர் அசந்து போய் விடுவார்கள். பழைய கோலியின் பாட்டம் ஹேண்ட் பலவீனத்தை எதிர்பார்த்து வருபவர்களுக்கு கோலி ஏமாற்றத்தை அளிக்குமாறு இடது கையை பயன்படுத்தி வலது கையை அழுத்தாமல் ஆட வேண்டும்.

  இவற்றையெல்லாம் செய்தால் நிச்சயம் கோலி மீண்டும் ரன்களின் பாதைக்குத் திரும்ப முடியும் என்கிறார் ஏ.என்.சர்மா.
  Published by:Muthukumar
  First published:

  Tags: IPL 2022, Virat Kohli, Virender sehwag

  அடுத்த செய்தி