பிக் ஸ்க்ரீனில் ஐ.பி.எல்? - ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்த தியேட்டர் நிர்வாகம்

கடந்த ஆண்டு திரையரங்குகளில் டிஜிட்டல் ஒளிபரப்புக்கு அதிகக் கட்டணம் வசூலிப்பதற்கு எதிராக தமிழ் திரையுலகம் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டது.

news18
Updated: March 28, 2019, 1:19 PM IST
பிக் ஸ்க்ரீனில் ஐ.பி.எல்? - ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்த தியேட்டர் நிர்வாகம்
திரையரங்கு
news18
Updated: March 28, 2019, 1:19 PM IST
ஐ.பி.எல் போட்டியை வெற்றி திரையரங்கில் ஒளிபரப்ப முடியுமா என்ற கேள்விக்கு அத்திரையரங்கின் நிர்வாக இயக்குநர் ராகேஷ் கவுதமன் பதிலளித்துள்ளார்.

ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடர் திருவிழாவின் 12-வது சீசன் கடந்த 23-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஐ.பி.எல் தொடரை வெற்றி திரையரங்கில் ஒளிபரப்ப முடியுமா என்ற கேள்வியை ரசிகர்கள் முன் வைத்துள்ளனர்.

இதற்கு பதிலளித்த அத்திரையரங்கின் நிர்வாக இயக்குநர் ராகேஷ் கவுதமன், “ஐ.பி.எல் போட்டியை திரையரங்கில் ஒளிபரப்ப முடியுமா என பலரும் கேட்டுள்ளீர்கள். இதற்கான பதில் முடியாது. சட்டத்தின்படி தணிக்கை செய்த படங்கள் காட்சிகளை மட்டுமே திரையரங்கில் திரையிட முடியும். நேரலை ஐ.பி.எல் போட்டிகளை தணிக்கை செய்ய முடியாது.

இந்தவிதிமுறை மாற்றப்பட்டால், வருங்காலத்தில் திரையரங்குகளில் ஐ.பி.எல் போட்டிகளை நேரலையாக ஒளிபரப்ப முடியும்” என்று கூறியுள்ளார்.கடந்த ஆண்டு திரையரங்குகளில் டிஜிட்டல் ஒளிபரப்புக்கு அதிகக் கட்டணம் வசூலிப்பதற்கு எதிராக தமிழ் திரையுலகம் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டது. இதனால் திரையரங்குகளில் புதிய படங்கள் எதுவும் வெளியாகவில்லை. இதனால் திரையரங்குகளில் மக்கள் கூட்டம் குறைந்தது.

இதையடுத்து திரையரங்குகளில் ஐ.பி.எல் போட்டிகளை ஒளிபரப்ப அனுமதி தர வேண்டும் என்று சில திரையரங்குகளின் உரிமையாளர்கள் சென்னை காவல் ஆணையரிடம் மனு அளித்தனர். அப்போது அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

வாக்காளர் விழிப்புணர்வுக்கான சிறப்பு பாடல் வீடியோ

First published: March 28, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...