SRHvDC | ஹைதராபாத் அணி 162 ரன்கள் குவிப்பு!

#SRHvDC | #IPL2019 | ஹைதராபாத் அணியில் எந்த வீரரும் அதிரடி காட்ட முடியாமல் திணறினார்

SRHvDC | ஹைதராபாத் அணி 162 ரன்கள் குவிப்பு!
#SRHvDC | #IPL2019 | ஹைதராபாத் அணியில் எந்த வீரரும் அதிரடி காட்ட முடியாமல் திணறினார்
  • News18
  • Last Updated: May 8, 2019, 9:26 PM IST
  • Share this:
டெல்லி  அணிக்கு எதிரானப் போட்டியில் ஹைதராபாத் அணி 162 ரன்கள் குவித்துள்ளது.

நடப்பு ஐ.பி.எல் சீசனில் லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில் ப்ளே ஆஃப் போட்டிகள் நடந்து வருகிறது. இதில் எலிமினேட்டர் போட்டியில் ஹைதராபாத் - டெல்லி அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

ஹைதராபாத் அணியில் சாஹா, குப்தில் தொடக்க வீரர்களாக களமிறங்கினார்கள். சாஹா 8 ரன்களில் இஷாந்த் சர்மா பந்துவச்சில் அவுட்டானார். அவரைத் தெடார்ந்து களமிறங்கிய மனிஷ் பாண்டே - குப்தில் ஜோடி நிதான ஆட்டத்தில் ஈடுபட்டனர்.


மனிஷ் பாண்டே 30 ரன்களிலும், குப்தில் 36 ரன்களிலும் அவுட்டாகினர். ஹைதராபாத் அணியில் எந்த வீரரும் அதிரடி காட்ட முடியாமல் திணறினார். ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் 27 பந்துகளில் 28 ரன்கள் மட்டுமே சேர்த்து பெவிலியன் திரும்பினார்.

கடைசி ஓவர்களில் அதிரடி காட்டிய ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதை தெடார்ந்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கி உள்ளது.Also Watch...






தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.














விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: May 8, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்