#KXIPvMI | ராகுல் சிறப்பான ஆட்டம்... மும்பையை வீழ்த்தியது பஞ்சாப்...!

IPL | டி காக், மும்பை அணிக்காக தனது முதல் அரைசதத்தை பதிவு செய்தார்.

news18
Updated: March 30, 2019, 8:09 PM IST
#KXIPvMI | ராகுல் சிறப்பான ஆட்டம்... மும்பையை வீழ்த்தியது பஞ்சாப்...!
அரைச்சதம் அடித்த ராகுல்
news18
Updated: March 30, 2019, 8:09 PM IST
லோகேஷ் ராகுல் 57 பந்துகளில் 71 ரன்கள் ஆட்டமிழக்காமல் எடுக்க பஞ்சாப் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது.

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் மும்பை - பஞ்சாப் அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா (32), டி காக் (60) ஆகியோர் அதிரடியாக விளையாடி ரன் எண்ணிக்கை உயர்த்தினர். டி காக், மும்பை அணிக்காக தனது முதல் அரைசதத்தை பதிவு செய்தார்.

அடுத்து வந்த வீரர்கள் சில பவுண்டரிகளை விளாசி விரைவில் வெளியேறினர். கடைசியில் ஹர்திக் பாண்டியா (31) அதிரடியாக விளையாட, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு மும்பை அணி 176 ரன்கள் எடுத்தது.
Loading...


பஞ்சாப் சார்பில், முகமது ஷமி, வில்ஜோன், முருகன் அஸ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்கவீரர் லோகேஷ் ராகுல் 57 பந்துகளில் 71 ரன்களை எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றி பெற வைத்தார். அவருக்கு பக்க பலமாக கெயில் 40 ரன்களும், அகர்வால் 43 ரன்களும் எடுத்தனர்.

ஸ்பின்னுல இத்தனை வெரைட்டியா? எனக்கு 5 விதமான ஸ்பின் தெரியும்... ரஷித் கான் ஓபன் டாக்!

முக்கிய வீரர் விலகல்... சி.எஸ்.கே அணிக்கு பின்னடைவா?

பாகிஸ்தான் பரிதாபங்கள்... 2 வீரர்கள் சதமடித்தும் தோல்வி!

7 பந்துகளில் தொடர்ந்து 7 சிக்ஸர்கள்... யுவராஜ் சிங்கின் சாதனையை தகர்த்தெறிந்த மும்பை வீரர்!

தமிழ் மக்களுக்காக எனது முதல் கானா பாட்டு... இது சும்மா டிரெய்லர் தான்மா..!

VIDEO | மொக்கை வாங்கிய சாக்‌ஷி தோனி... சரியாகச் சொன்ன ஜடேஜா... வயிறு வலிக்க சிரித்த வீரர்கள்...!

POINTS TABLE:


SCHEDULE TIME TABLE:


ORANGE CAP:


PURPLE CAP:


RESULTS TABLE:


Also Watch...



First published: March 30, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...