ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

ஐபிஎல் மினி ஏலத்தில் 10 அணிகள் எடுக்க நினைக்கும் வீரர்களின் முழு விவரம் இதோ

ஐபிஎல் மினி ஏலத்தில் 10 அணிகள் எடுக்க நினைக்கும் வீரர்களின் முழு விவரம் இதோ

ஐபிஎல் ஏலம்

ஐபிஎல் ஏலம்

ஐபிஎல் வரலாற்றில் இதுவரை ராஜஸ்தான் அணிக்காக தென் ஆப்பிரிக்கா ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் தான் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டார் அந்த சாதனையை இந்த மினி ஏலத்தில் முறியடிக்க வாய்ப்புள்ளது.

  • News18 Tamil
  • 5 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஐபிஎல் மினி ஏலம் நாளை (டிசம்பர் 23) கொச்சியில் நடைபெறுகிறது. இதில், மொத்தம் 405 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். ஆரம்ப கட்டத்தில் பட்டியலில் 991 கிரிக்கெட் வீரர்கள் ஏலத்தில் பதிவு செய்திருந்தனர். இறுதிப் பட்டியல் 405 வீரர்களாக குறைக்கப்பட்டு ஏலம் விடப்பட்டுள்ளது. 10 அணிகளில் மொத்தம் 87 இடங்கள் உள்ளன. 405 வீரர்களில் 273 இந்திய வீரர்கள், 132 வெளிநாட்டு வீரர்களும் இந்த ஏலத்தில் பங்கேற்க உள்ளனர். மொத்தமாக ரூ.206.5 கோடி செலவு செய்யப்படவுள்ளது. இந்த நிலையில் இந்த ஐபிஎல் மினி ஏலத்தில் அதிக விலைக்கு யார் ஏலத்தில் போவார்கள் என எதிர்பார்ப்பு அனைவரது மத்தியில் நிலவி வருகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ்:

ஐபிஎல் தொடரில் 4 முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.74.55 கோடி செலவு செய்து 18 வீரர்களை எடுக்கவுள்ளது. மீதமுள்ள ரூ.20.45 கோடி தொகையுடன் 2 வெளிநாட்டு வீரர்கள் உள்ளிட்ட 7 பேரை ஏலத்தில் எடுத்து கொள்ள திட்டமிட்டுள்ளது.

அணியில் உள்ள வீரர்கள்: 

எம்எஸ் தோனி (கேப்டன்) ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, மொயின் அலி, சுப்ரான்ஷு சேனாபதி,  அம்பதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், டுவைன் பிரிட்டோரியஸ், மிட்செல் சான்ட்னர், மகேஷ் தீக்ஷனா, பிரசாந்த் சோலங்கி, தீபக் சாஹர், முகேஷ் சவுத்ரி, சிமர்ஜீத் சிங், துஷார் தேஷ்பாண்டே, மதீஷா பத்திரனா

எடுக்க நினைக்கும் வீரர்கள்:

சாம் கரன், என் ஜெகதீசன், அடில் ரஷித், பில் சால்ட், ஆடம் ஜம்பா, ஆடம் மில்னே, மணீஷ் பாண்டே, ரோஹன் குன்னும்மாள், சிக்கந்தர் ராசா

குஜராத் டைட்டன்ஸ்:

கடந்த 2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமான குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா கேப்டனாக செயல்பட்டு முதல் தொடரிலே கோப்பையை வென்றது. இந்த நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணி ரூ.75.75 கோடியை செலவு செய்து 18 வீரர்களை தக்க வைத்து கொண்டுள்ளது. மேலும் மீதமுள்ள ரூ.19.25 கோடியில் 3 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 7 வீரர்களை இந்த ஏலத்தில் எடுக்கவுள்ளது.

அணியில் உள்ள வீரர்கள்: 

ஹர்திக் பாண்டியா ( கேப்டன்)சுப்மான் கில், சாய் சுதர்சன், விருத்திமான் சாஹா, மேத்யூ வேட், டேவிட் மில்லர், ராகுல் தெவாடியா, அபினவ் மனோகர், விஜய் சங்கர், ரஷித் கான், சாய் கிஷோர், நூர் அகமது, ஜெயந்த் யாதவ், அல்ஜாரி ஜோசப், முகமது ஷமி, யாஷ் தயாள், தர்ஷன் நல்கண்டே, பிரதீப் சங்வான்

எடுக்க நினைக்கும் வீரர்கள்:

மயங்க் அகர்வால், விராட் சிங், டிராவிஸ் ஹெட், ஜோஷ் பிலிப், ரிலீ ரோசோவ், ஜோ ரூட், சாம் கரன், டைமல் மில்ஸ், ஜே ரிச்சர்ட்சன், ரீஸ் டாப்லி, ஜோசுவா லிட்டில், ஷெல்டன் காட்ரெல்

மும்பை இந்தியன்ஸ்

மும்பை இந்தியன்ஸ் அணியில் ரூ.74.45 கோடியில் 16 வீரர்களை தக்க வைத்துள்ளது. மீதமுள்ள ரூ.20.55 கோடியில் 3 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 9 வீரர்களை ஏலத்தில் எடுக்கவுள்ளது.

அணியில் உள்ள வீரர்கள்: 

ரோஹித் சர்மா (கேப்டன்) இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், டெவால்ட் ப்ரீவிஸ், திலக் வர்மா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டிம் டேவிட், ராமன்தீப் சிங்,குமார் கார்த்திகேயா, ஹிருத்திக் ஷோக்கீன்,அர்ஷத் கான், ஆகாஷ் மத்வால், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜஸ்பிரித் பும்ரா, ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப்

மும்பை அணி எடுக்க நினைக்கும் வீரர்கள்:

மயங்க் மார்கண்டே, முருகன் அஸ்வின், ஷாபாஸ் நதீம், சந்தீப் சர்மா, இஷாந்த் சர்மா, ஷிவம் மாவி, தப்ரைஸ் ஷம்சி, ஆடம் ஜம்பா, அடில் ரஷித், இஷான் போரல், சிக்கந்தர் ராசா

ராயல் சேலஞ்ர்ஸ் பெங்களூர் அணி ரூ.86.25 கோடி 18 வீரர்களை தக்க வைத்துள்ளது. மீதமுள்ள ரூ.8.75 கோடியில் 2 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 7 வீரர்களை ஏலத்தில் எடுக்கவுள்ளது.

அணியில் உள்ள வீரர்கள்: 

ஃபாப் டு பிளெசிஸ் (கேப்டன்) விராட் கோலி, அனுஜ் ராவத், ரஜத் படிதர்ம், ஃபின் ஆலன், க்ளென் மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக், மஹிபால் லோம்ரோர், சுயாஷ் பிரபுதேசாய், டேவிட் வில்லி, ஷாபாஸ் அகமது, வன்னிடு ஹசரங்கா, கரண் ஷர்மா, ஜோஷ் ஹேசில்வுட், ஹர்ஷல் படேல், சித்தார்த் கவுல், முகமது சிராஜ், ஆகாஷ் தீப்

பெங்களூர் அணி எடுக்க நினைக்கும் வீரர்கள்:

விராட் சிங், டைமல் மில்ஸ், ஆண்ட்ரூ டை, நவீன் உல் ஹக், ஜெய்தேவ் உனத்கட், அர்சான் நாகஸ்வல்லா, விஷ்ணு வினோத், ஹாரி புரூக், ரஸ்ஸி வான் டெர் டுசென், ஷகிப் அல் ஹசன்

டெல்லி கேப்பிட்டல்ஸ்

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ரூ.75.55 கோடியில் 20 வீரர்களை தக்க வைத்துள்ளது. மேலும் இந்த மினி ஏலத்தில் ரூ.19.45 கோடி மீதமுள்ள நிலையில் அதில் 2 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 5 வீரர்களை ஏலத்தில் எடுக்க உள்ளது.

அணியில் உள்ள வீரர்கள்:

ரிஷப் பந்த் (கேப்டன்) டேவிட் வார்னர், பிருத்வி ஷா, மிச்செல் மார்ஷ், யாஷ் துல், ரிஷப் பந்த், ரோவ்மேன் பவல், சர்பராஸ் கான், ரிபால் படேல்,அக்சர் படேல், லலித் யாதவ், அமன் கான், குல்தீப் யாதவ், பிரவின் துபே, விக்கி ஓஸ்ட்வால், சேத்தன் சகாரியா, அன்ரிச் நார்ட்ஜே, லுங்கி என்கிடி, முஸ்தாபிசுர் ரஹ்மான், கலீல் அகமது, கமலேஷ் நாகர்கோடி

டெல்லி அணி எடுக்க நினைக்கும் வீரர்கள்:

ஜேசன் ராய், பில் சால்ட், ரிலீ ரோசோவ், கேன் வில்லியம்சன், லிட்டன் தாஸ், விஷ்ணு வினோத், ஜேசன் ஹோல்டர், தசுன் ஷனகா

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் தற்போது 14 வீரர்கள் தக்க வைக்கப்பட்டுள்ளனர். ரூ.87.95 கோடி ரூபாயை செலவு செய்துள்ள இந்த அணிக்கு ரூ.7.05 கோடி கையில் உள்ளது. இதில் 3 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 11 வீரர்களை கொல்கத்தா அணி ஏலத்தில் எடுக்கவுள்ளது.

அணியில் உள்ள வீரர்கள்:

ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்) ரஹ்மானுல்லா குர்பாஸ், வெங்கடேஷ் ஐயர்,நிதிஷ் ராணா, ரிங்கு சிங்,ஆண்ட்ரே ரஸ்ஸல், அனுகுல் ராய்

வருண் சக்கரவர்த்தி, சுனில் நரைன், டிம் சவுத்தி, லாக்கி பெர்குசன், ஹர்ஷித் ராணா, ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ்

கொல்கத்தா அணி எடுக்க நினைக்கும் வீரர்கள்:

ஹாரி புரூக், டிராவிஸ் ஹெட், ஜோஷ் பிலிப், கேன் வில்லியம்சன், ஷெல்டன் ஜாக்சன், என் ஜெகதீசன், கேஎஸ் பாரத், ஷஷாங்க் சிங், மயங்க் மார்கண்டே, முருகன் அஸ்வின்

பஞ்சாப் கிங்ஸ்

பஞ்சாப் கிங்ஸ் அணியில் தற்போது ரூ.62.80 கோடியில் 16 வீரர்கள் தக்க வைக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள ரூ.32.20 கோடியில் 3 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 9 வீரர்களை இந்த மினி ஏலத்தில் பஞ்சாப் அணி எடுக்கவுள்ளது

அணியில் உள்ள வீரர்கள்:

ஷிகர் தவான் (கேப்டன்) ஜானி பேர்ஸ்டோவ், பானுகா ராஜபக்சே, பிரப்சிம்ரன் சிங்,லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா, ஷாருக்கான், அதர்வா டைடே, ராஜ் பாவா, ரிஷி தவான், ராகுல் சாஹர், ஹர்பிரீத் பிரார், அர்ஷ்தீப் சிங், பால்தேஜ் தண்டா, ககிசோ ரபாடா, நாதன் எல்லிஸ்

பஞ்சாப் அணி எடுக்க நினைக்கும் வீரர்கள்:

சந்தீப் சர்மா, இஷாந்த் சர்மா, சிவம் மாவி, பென் ஸ்டோக்ஸ், சாம் கரன், சிக்கந்தர் ராசா, ஜேசன் ஹோல்டர், நிக்கோலஸ் பூரன், ஹென்ரிச் கிளாசென், விராட் சிங், கே.எஸ்.பாரத், மயங்க் அகர்வால், மந்தீப் சிங்

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியில் ரூ.71.65 கோடியில் 15 வீரர்களை தக்க வைத்துள்ளது. மீதமுள்ள ரூ.23.35 கோடியில் 4 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 10 வீரர்களை ஏலத்தில் எடுக்கவுள்ளது.

 அணியில் உள்ள வீரர்கள்:

கேஎல் ராகுல்(கேப்டன்) குயின்டன் டி காக், மனன் வோஹ்ரா, கைல் மேயர்ஸ்,மார்கஸ் ஸ்டோனிஸ், ஆயுஷ் படோனி, தீபக் ஹூடா, கரண் சர்மா, க்ருனால் பாண்டியா, கிருஷ்ணப்பா கவுதம், ரவி பிஷ்னோய்,அவேஷ் கான், மொஹ்சின் கான், மயங்க் யாதவ், மார்க் வுட்

லக்னோ அணி எடுக்க நினைக்கும் வீரர்கள்:

ஹாரி புரூக், கேமரூன் கிரீன், பென் ஸ்டோக்ஸ், சாம் கரன், பிரியம் கார்க், பாபா அபராஜித், ரிலே மெரிடித், ஜோசுவா லிட்டில், ஆடம் மில்னே, லூக் வூட், பிளெஸிங் முசரபானி, நவீன் உல் ஹக், சிக்கந்தர் ராசா

சன்ரைசர்ஸ் ஐதராபாத்

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் ரூ.52.75 கோடி செலவு செய்து 12 வீரர்களை தக்க வைத்துள்ளது. மீதமுள்ள ரூ.42.25 கோடியில் 4 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 12 வீரர்களை ஏலத்தில் எடுக்க திட்டமிட்டுள்ளது.

அணியில் உள்ள வீரர்கள்:

ராகுல் திரிபாதி, அபிஷேக் சர்மா, ஐடன் மார்க்ராம், க்ளென் பிலிப்ஸ், அப்துல் சமத், வாஷிங்டன் சுந்தர்,மார்கோ ஜான்சன், டி நடராஜன், புவனேஷ்வர் குமார், கார்த்திக் தியாகி, ஃபசல்ஹாக் ஃபரூக்கி, உம்ரான் மாலிக்

ஐதராபாத் அணி எடுக்க நினைக்கும் வீரர்கள்:

பென் ஸ்டோக்ஸ், ஜோஷ் பிலிப், பில் சால்ட், என் ஜெகதீசன், சிக்கந்தர் ராசா, டிராவிஸ் ஹெட், ஜோ ரூட், ரிலீ ரோசோவ், கேமரூன் கிரீன், ஷகிப் அல் ஹசன், அடில் ரஷித், ஆடம் ஜம்பா, முருகன் அஸ்வின்

ராஜஸ்தான் ராயல்ஸ்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ.81.80 கோடி ரூபாயை செலவு செய்து 16 வீரர்களை தக்க வைத்துள்ளது. மீதமுள்ள ரூ.13.20 கோடியில் 4 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 9 வீரர்களை இந்த மினி ஏலத்தில் எடுக்கவுள்ளது

அணியில் உள்ள வீரர்கள்:

சஞ்சு சாம்சன்(கேப்டன்) ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், தேவ்தத் படிக்கல், துருவ் ஜூரல்,ஷிம்ரோன் ஹெட்மியர், ரியான் பராக், ரவிச்சந்திரன் அஸ்வின், யுஸ்வேந்திர சாஹல், கேசி கரியப்பா, பிரசித் கிருஷ்ணா, டிரென்ட் போல்ட், ஓபேட் மெக்காய், நவ்தீப் சைனி, குல்தீப் யாதவ், குல்தீப் சென்

ராஜஸ்தான் அணி எடுக்க நினைக்கும் வீரர்கள்:

கேமரூன் கிரீன், ஜோஷ் பிலிப், பில் சால்ட், ஜேசன் ஹோல்டர், ஷகிப் அல் ஹாசன், டேரில் மிட்செல், டேவிட் வைஸ், டேனியல் சாம்ஸ், சிக்கந்தர் ராசா, தசுன் ஷனகா, வெய்ன் பார்னெல்

First published:

Tags: IPL, IPL Auction