பேர்ஸ்டோவ், வார்னர் ருத்ரதாண்டவம்... ஹைதராபாத் 231 ரன்கள் குவிப்பு..!

#SRHvsRCB in #Hyderabad: #JonnyBairstow, #DavidWarner Tons | பேர்ஸ்டோவ் தனது முதல் ஐ.பி.எல் சதத்தையும் பதிவு செய்தார்.

news18
Updated: April 1, 2019, 3:32 PM IST
பேர்ஸ்டோவ், வார்னர் ருத்ரதாண்டவம்... ஹைதராபாத் 231 ரன்கள் குவிப்பு..!
முதல் ஐ.பி.எல் சதத்தை அடித்த பேர்ஸ்டோவ். (IPL)
news18
Updated: April 1, 2019, 3:32 PM IST
பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் ஜானி பேர்ஸ்டோ, டேவிட் வார்னரின் அபார சதத்தால் ஹைதராபாத் அணி 231 ரன்கள் குவித்தது.

ஹைதராபாத்தில் நடைபெறும் ஐ.பி.எல் தொடரின் 11-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆர்.சி.பி கேப்டன் விராட் கோலி ஃபீல்டிங் தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் களமிறங்கிய ஹைதராபாத்தின் தொடக்க வீரர்கள் ஜானி பேர்ஸ்டோவ் மற்றும் டேவிட் வார்னர், எதிரணியின் பந்துவீச்சை சிதறடித்தனர். குறிப்பாக, பேர்ஸ்டோவ் பெங்களூரு பவுலர்களை அடித்து நொறுக்கி துவம்சம் செய்தார்.

Loading...
அவர், 56 பந்துகளில் 12 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள் விளாசி 114 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அத்துடன், தனது முதல் ஐ.பி.எல் சதத்தையும் பதிவு செய்தார். அடுத்த வந்த விஜய் சங்கர் 9 ரன்களில் வெளியேறினார். மறுமுனையில் அதிரடியை தொடர்ந்த வார்னர், தனது 4-வது ஐ.பி.எல் சத்தை அடித்தார்.இறுதியில் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 231 ரன்கள் குவித்தது. இதுவே நடப்பு சீசனில் ஒரு இன்னிங்சில் அடிக்கப்பட்ட அதிக ரன்களாகும்.

#CSKvRR | சென்னை அணிக்காக புதிய சாதனையை நோக்கி பிராவோ!

குடிபோதையில் கார் ஓட்டி விபத்து... பிரபல கிரிக்கெட் அணியின் கேப்டன் கைது!

‘ஹிட்மேன்’ ரோகித் சர்மாவுக்கு ரூ.12 லட்சம் அபராதம்... ஐ.பி.எல் நிர்வாகம் அதிரடி!

#CSKvRR | சேப்பாக்கத்தில் வெற்றி வாய்ப்பு யாருக்கு அதிகம்? சி.எஸ்.கே அணியில் என்ன மாற்றம்?

சி.எஸ்.கே அணியில் புதிய வீரர் சேர்ப்பு... சென்னை ரசிகர்கள் கொண்டாட்டம்!

#IPL2019 | ‘யூனிவெர்சல் பாஸ்’ கிறிஸ் கெய்ல் புதிய வரலாற்று சாதனை!

Also Watch...POINTS TABLE:


SCHEDULE TIME TABLE:


ORANGE CAP:


PURPLE CAP:


RESULTS TABLE:

விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: March 31, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...