ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

#KXIPvMI | அதிரடி காட்டிய மும்பை... பஞ்சாப் அணிக்கு 177 ரன்கள் இலக்கு...!

#KXIPvMI | அதிரடி காட்டிய மும்பை... பஞ்சாப் அணிக்கு 177 ரன்கள் இலக்கு...!

டி காக் மற்றும் ரோகித் சர்மா. (MI)

டி காக் மற்றும் ரோகித் சர்மா. (MI)

#KXIPvsMI in #Mohali: #MumbaiIndians End Innings at 176/7 | டி காக், மும்பை அணிக்காக தனது முதல் அரைசதத்தை பதிவு செய்தார்.

 • News18
 • 2 minute read
 • Last Updated :

  மொஹாலியில் நடைபெற்று வரும் 9-வது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு மும்பை அணி 176 ரன்கள் எடுத்தது.

  மொஹாலியில் நடைபெற்று வரும் 9-வது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இரு அணிகளும் தலா ஒரு வெற்றி, ஒரு தோல்வியை பெற்றிருப்பதால், 2-வது வெற்றியைப் பதிவு செய்யும் முனைப்பில் களமிறங்கின.

  டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் பந்துவீச்சு தேர்வு செய்தார். பஞ்சாப் அணியில் மட்டும் வருண் சக்கரவர்த்தி நீக்கப்பட்டு முருகன் சேர்க்கப்பட்டார்.

  மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா (32), டி காக் (60) ஆகியோர் அதிரடியாக விளையாடி ரன் எண்ணிக்கை உயர்த்தினர். டி காக், மும்பை அணிக்காக தனது முதல் அரைசதத்தை பதிவு செய்தார்.

  Quinton de Kock,
  அரைசதம் அடித்த டி காக். (MI)

  அடுத்து வந்த வீரர்கள் சில பவுண்டரிகளை விளாசி விரைவில் வெளியேறினர். கடைசியில் ஹர்திக் பாண்டியா (31) அதிரடியாக விளையாட, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு மும்பை அணி 176 ரன்கள் எடுத்தது.

  பஞ்சாப் சார்பில், முகமது ஷமி, வில்ஜோன், முருகன் அஸ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

  ஸ்பின்னுல இத்தனை வெரைட்டியா? எனக்கு 5 விதமான ஸ்பின் தெரியும்... ரஷித் கான் ஓபன் டாக்!

  முக்கிய வீரர் விலகல்... சி.எஸ்.கே அணிக்கு பின்னடைவா?

  பாகிஸ்தான் பரிதாபங்கள்... 2 வீரர்கள் சதமடித்தும் தோல்வி!

  7 பந்துகளில் தொடர்ந்து 7 சிக்ஸர்கள்... யுவராஜ் சிங்கின் சாதனையை தகர்த்தெறிந்த மும்பை வீரர்!

  தமிழ் மக்களுக்காக எனது முதல் கானா பாட்டு... இது சும்மா டிரெய்லர் தான்மா..!

  VIDEO | மொக்கை வாங்கிய சாக்‌ஷி தோனி... சரியாகச் சொன்ன ஜடேஜா... வயிறு வலிக்க சிரித்த வீரர்கள்...!

  POINTS TABLE:

  SCHEDULE TIME TABLE:

  ORANGE CAP:

  PURPLE CAP:

  RESULTS TABLE:

  Also Watch...

  Published by:Murugesan L
  First published:

  Tags: IPL 2019, R Ashwin