சிட்னியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் `ரீயூனியன்’!

IPL: Kolkata Knight Riders Reunion In Sydney | சிட்னியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர்களான குல்தீப், க்றிஸ் லின், தினேஷ் கார்த்தி ஒன்றாக போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர். #KKR

news18
Updated: November 26, 2018, 5:14 PM IST
சிட்னியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் `ரீயூனியன்’!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர்கள் கூட்டாக புகைப்படம் எடுத்துக்கொண்டர் (Twitter/KKR)
news18
Updated: November 26, 2018, 5:14 PM IST
சிட்னி மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர்களான குல்தீப், க்றிஸ் லின், தினேஷ் கார்த்திக் ஒன்றாக போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர்.

சிட்னியில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி டி-20 போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய அணி டி-20 தொடரை 1-1 என சமன் செய்தது. முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 4 ரன்னில் வெற்றி பெற்றது. 2-வது போட்டி மழையால் கைவிடப்பட்டது. தோல்வியில் இருந்து மீண்டு வந்த இந்தியா கடைசி போட்டியில் வெற்றி பெற்று தொடரை டிரா செய்தது.

போட்டி முடிந்த பிறகு, ஐ.பி.எல் டி-20 தொடரின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வரும் ஆஸ்திரேலியாவின் க்றிஸ் லின், இந்தியாவின் குல்தீப் யாதவ் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகிய மூவரும் ஒன்றாகச் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இந்தப் புகைப்படத்தை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.க்ருனல் பாண்டியாவிற்கு (5 விக்கெட்) அடுத்தபடியாக அதிக விக்கெட் (4 விக்கெட்) எடுத்த வீரர் என்ற பெருமையை குல்தீப் யாதவ் பெற்றார். க்றிஸ் லின் 3 போட்டிகளிலும் சேர்த்து 63 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலிய அணியில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் வரிசையில் 2-வது இடத்தை பிடித்தார். தினேஷ் கார்த்திக் 2 போட்டிகளில் களமிறங்கி 52 ரன்கள் எடுத்தார். இந்த மூன்று வீரர்களும் டி-20 தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர்.

Also See...

First published: November 26, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...