உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய கிரிக்கெட் அணியின் தோல்விக்கு ஐபிஎல் போட்டிகளே காரணம் என ரசிகர்கள் டிவிட்டரில் பிசிசி ஐ-யை வருத்தெடுத்து வருகின்றனர். ஐபிஎல் போட்டியை தடைசெய்ய வேண்டும் எனவும் ரசிகர்கள் கூறிவருகின்றனர்.
டி 20 உலக க் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் களைகட்டி வருகிறது. ஆனால் இந்திய அணிக்கோ களையிழந்து வருகிறது. குரூப் பி பிரிவில் இடம்பிடித்துள்ள இந்திய அணி பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணியிடம் படுதோல்வியடைந்து அரையிறுதி வாய்ப்பை ஏறக்குறைய இழந்துள்ளது.
விளையாட்டில் வெற்றியும் தோல்வியும் சம மாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது உலக நியதி ஆனால் இந்திய அணி வீரர்கள் களத்தில் வெற்றிக்காக சிறிதும் போராடாமல் முழுவதும் சரணடைந்தது தோல்வியின் மீதான பார்வையை மாற்றியமைத்துள்ளது.
உலக க் கோப்பை போட்டிகள் தொடங்குவதற்கு முன் ஐபிஎல் போட்டிகளில் இந்திய வீரர்கள் விளையாடியதால் மிகச்சிறந்த ஃபார்மில் இருக்கிறார்கள் எனவே நிச்சயம் இந்தியாவிற்குதான் கோப்பை என ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருந்தனர். ஆனால் இவை அனைத்து பொய்த்துப்போகியுள்ளது. ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட இந்திய வீரர்கள் சர்வதேச போட்டிகளில் சொதப்பி தோல்வி முகத்தை பரிசளித்துள்ளனர்.
இதனால் இந்திய ரசிகர்கள் டிவிட்டரில் ஐபிஎல் போட்டியை தடைசெய்ய வேண்டும் என Ban IPL என்ற ஹேஷ் டேக் மூலம் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் வாசிம் அக்ரம் இந்திய வீரர்களை கடுமையாக விமர்ச்சித்துள்ளார். இந்திய வீரர்கள் அனைவரும் ஐபிஎல் போட்டிகளில் விளையாடினால் போதும் என நினைத்துக்கொள்கிறார்கள் எனவும் மூத்த வீரர்கள் சர்வதேச போட்டிகளில் விளையாட ஆர்வம் காட்டுவதில்லை எனவும் கடுமையாக சாடியுள்ளார்.
உலகக் கோப்பை போட்டி தொடங்குவதற்கு முன் இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது.
இரு அணிகளுக்குமிடையிலான கடைசி டெஸ்ட் போட்டி கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக இருந்தது ஆனால் அப்படி ஒத்திவைக்கப்படாவிட்டால் ஐபிஎல் போட்டியை நடத்துவதில் சிக்கல் ஏற்படும் எனக்கருதி பிசிசிஐ போட்டியை ரத்து செய்தது. இதனால் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி விட்டுக்கொடுக்கப்பட்டது. இந்த விவகாரமும் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது.
ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதை கருத்தில் கொண்டே வீரர்களின் தேர்வு முறை இருந்ததாகவும் ரசிகர்கள் பிசிசிஐ-யை விமர்ச்சித்து வருகின்றனர். மேலும் ஐபிஎல் போட்டி முக்கியம் என எடுத்துக்கொண்டால் ஏன் நடப்பு சீசனில் அதிக விக்கெட் வீழ்த்திய ஹர்சல் படேல் மற்றும் அதிக ரன் விளாசிய ருத்துராஜ் ஆகியோரை தேர்வு செய்யவில்லை எனவும் சரமாரியாக கேள்வி எழுப்பி ஐபிஎல் போட்டி மீதான எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்திய வீரர்கள், ஐபிஎல், அணி நிர்வாகம், பிசிசிஐ என அனைவரையும் டிவிட்டரில் விமர்ச்சிக்கும் ரசிகர்களின் ஒரே கோரிக்கை ஐபிஎல் தொடரை ரத்து செய்யவேண்டும் என்பதே.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: IPL 2021, T20 World Cup