வைரல் வீடியோ: கடுப்பேற்றிய பிராவோ! டென்ஷனில் பேட்டை அந்தரத்தில் தூக்கி எறிந்த பொல்லார்ட்

ரன் எடுக்க முடியாத விரக்தியில் பொல்லர்ட் கீரிஸில் இருந்தவாறே பேட்டைத் தூக்கி வீசி கேட்ச் செய்தார்

Vijay R | news18
Updated: May 13, 2019, 3:56 PM IST
வைரல் வீடியோ: கடுப்பேற்றிய பிராவோ! டென்ஷனில் பேட்டை அந்தரத்தில் தூக்கி எறிந்த பொல்லார்ட்
பொல்லார்ட்
Vijay R | news18
Updated: May 13, 2019, 3:56 PM IST
கடைசி ஓவரில் பிராவோ வீசிய பந்தில் ரன் எடுக்க முடியாத டென்ஷனில் பொல்லார்ட் க்ரீஸில் நின்றவாறே பேட்டை அந்தரத்தில் தூக்கி எறிந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

நடப்பு ஐ.பி.எல் தொடரின் இறுதிப்போட்டி நேற்று ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி மைதானத்தில் நடைபெற்றது. இறுதி போட்டியில் 4-வது முறையாக கோப்பையை வெல்ல சென்னை, மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தது.

Also Watch : கோப்பையை மாத்தி மாத்தி நாங்களே வச்சிக்கிறோம் - தோனி


கோப்பையை வென்ற உற்சாகத்தில் மும்பை அணி


இதைத் தொடர்ந்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் கடைசி பந்தில் மும்பை அணி 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் கோப்பையை 4 முறை வென்ற பெருமையை மும்பை அணிபெற்றது. ஆட்ட நாயகனாக மும்பை வேகப்பந்து வீச்சாளர் பும்ராவும், தொடர் நாயகனாக ரஷலும் தேர்வு செய்யப்பட்டனர்.

Loading...

இந்தப் போட்டியில் மும்பை அணிக்கு எதிராக கடைசி ஓவரை பிராவோ வீசினார். எதிர்முனையில் அதிரடி வீரர் பொல்லார்ட் பேட்டிங் செய்தார். பொல்லார்ட் ரன் எடுக்க முடியாத அளவிற்கு பிராவோ ஆஃப் திசையில் வீசினார். தொடர்ந்து 2 பந்துகளை அவர் டாட் பாலாக வீச, நடுவர்கள் இதை வைடாக அறிவிக்காமல் முறையான பந்து என்ற அறிவித்தனர்.ரன் எடுக்க முடியாத விரக்தியில் பொல்லர்ட் கீரிஸில் இருந்தவாறே பேட்டை தூக்கி வீசி கேட்ச் செய்தார். பின்னர் பிராவோ பந்துவீச வந்த போது ஆஃப் திசையில் நகர்ந்து நின்று பவுலரின் கவனத்தை திசை திருப்ப முயன்றார். பின் அவரே ஒதுங்கி கொண்டு மீண்டும் முறையாக விளையாட ஆரம்பித்தார். இந்த போட்டியில் பொல்லார்ட் 25 பந்துகளில் 41 ரன்கள் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: தோனி அவுட்டே இல்லை - வைரலாகும் சிறுவன் அழும் வீடியோ

Also Watch

First published: May 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...