உலகக்கோப்பையை விட ஐ.பி.எல் போட்டிதான் சிறந்தது.. வெளிநாட்டு வீரர் புகழாரம்!

#IPL even better than #WorldCup : #RCB’s Rock star | ப்ளே ஆஃப் சுற்று வாய்ப்பில் இருந்து பெங்களூரு அணி வெளியே சென்றுவிட்டது.

உலகக்கோப்பையை விட ஐ.பி.எல் போட்டிதான் சிறந்தது.. வெளிநாட்டு வீரர் புகழாரம்!
IPL
  • News18
  • Last Updated: May 4, 2019, 2:35 PM IST
  • Share this:
உலகக்கோப்பையைவிட ஐ.பி.எல் போட்டிதான் சிறந்தது என ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஏபி டிவில்லியர்ஸ் கூறியுள்ளார்.

நடப்பு ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் இந்த வாரத்துடன் முடிவடைகின்றன. லீக் போட்டிகள் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும்.

பட்டியலில் மூன்று இடத்தில் இருக்கும், நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிட்டன.


Chennai Super Kings, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. (CSK)


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு, நடப்பு தொடர் மோசமானதாக அமைந்துவிட்டது. இதுவரை, அந்த அணி 13 போட்டிகளில் விளையாடி 4 வெற்றி, 8 தோல்வி, ஒரு முடிவில்லை என 9 புள்ளிகளுடன் பட்டியலில் கடைசி இடத்தில் தவிக்கிறது.

ஏற்கனவே, ப்ளே ஆஃப் சுற்று வாய்ப்பில் இருந்து பெங்களூரு அணி வெளியே சென்றுவிட்டது. அந்த அணிக்கு இன்னும் ஒரு போட்டி மட்டுமே உள்ளது. இந்நிலையில், ஐ.பி.எல் குறித்து அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் புகழ்ந்து பேசியுள்ளார்.
ஏபி டி விலியர்ஸ்.


“உண்மையாக சொல்ல வேண்டுமானால், ஐ.பி.எல் போட்டிக்கு இணையாக எதுவும் இல்லை. நான் உலகம் முழுவதும் பல்வேறு போட்டிகளில் விளையாடியுள்ளேன். உலகக்கோப்பை விட இது சிறந்தது என்று நான் நினைக்கிறேன்” என்று டி வில்லியர்ஸ் கூறியுள்ளார்.

பஞ்சாப் அணியை வீழ்த்தியது கொல்கத்தா!
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: May 4, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading