விளையாட்டு

  • associate partner
Home » News » Sports » CRICKET IPL DHONI FAN STADIUM YUV SADA

பயிற்சியின்போது திடீரென தோனியின் காலில் விழுந்த ரசிகர்...

பயிற்சியின்போது திடீரென தோனியின் காலில் விழுந்த ரசிகர்...
தோனி காலில் விழும் ரசிகர்
  • Share this:
பயிற்சியின்போது, திடீரென மைதானத்திற்குள் ஓடிவந்த ரசிகர் ஒருவர் தோனியின் காலில் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் இரண்டு அணிகளாக பிரிந்து பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டனர் . இன்றைய ஆட்டத்தில் மகேந்திர சிங் தோனி, முரளி விஜய், அம்பாத்தி ராயுடு, ஹர்பஜன் சிங், பியூஸ் சாவ்லா, சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

சென்னை அணி வீரர்களின் பயிற்சியினை பார்க்க வழக்கம் போல ரசிகர்கள் மைதானத்தில் குவிந்துள்ளனர்.


சென்னை அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது ரசிகர் ஒருவர் இரும்பு வேலியை தாண்டி மைதானத்திற்குள் நுழைந்து, விக்கெட் கீப்பிங் செய்து கொண்டிருந்த கேப்டன் தோனி காலில் விழுந்தார்.

அருகில் இருந்த வீரர்கள் மற்றும் பாதுகாவலர்கள் தடுத்து அந்த ரசிகரை மைதானத்தை விட்டு வெளியே அனுப்பினர். தற்போது காவல்துறையினர் மைதானத்தில் ரசிகர்கள் இருக்கும் கேலரியில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
First published: March 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading