CSKvRCB | மீண்டும் தொடங்கியது தோனியின் கர்ஜனை; பந்து வீச்சைத் தேர்வு செய்தது சென்னை

ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் சென்னை அணியும், கடைசி இடத்தில் இருக்கும் பெங்களூரு அணியும் பலப்பரீட்சை நடத்துகிறது.

CSKvRCB | மீண்டும் தொடங்கியது தோனியின் கர்ஜனை; பந்து வீச்சைத் தேர்வு செய்தது சென்னை
தோனி மற்றும் சக வீரர்கள். (IPL)
  • News18
  • Last Updated: April 21, 2019, 7:47 PM IST
  • Share this:
நடப்பு ஐபிஎல் சீசனின் 39-வது லீக் போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் சென்னை அணியும், கடைசி இடத்தில் இருக்கும் பெங்களூரு அணியும் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றால் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும். அதேப்போன்று பெங்களூரு அணி தோல்வியடைந்தால் ப்ளே ஆஃப் சுற்றில் தகுதி பெறும் வாய்ப்பை இழக்கும். பெங்களூரு அணிக்கு இன்றைய போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.

சென்னை அணியின் கேப்டன் தோனி முதுகுப் பகுதியில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக கடைசி போட்டியில் விளையாடாமல் ஓய்வில் இருந்தார். தற்போது அவர் அணிக்கு திரும்பியுள்ளது  ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


கடைசியாக பெங்களூரு, பஞ்சாப் அணிக்கு எதிராக வெற்றி பெற்றது. இந்த போட்டியில் கேப்டன் கோலி அதிரடியாக விளையாடி சதம் அடித்து இருந்தார். அதனால் இன்றையப் போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது.




First published: April 21, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading